ரக்ஷாபந்தன் பட விழாவில் மேடையில் கதறி அழுத அக்ஷய் குமார்?...ஏன் அப்படி என்ன நடந்தது?

மும்பை : ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் நடிகர் அக்‌ஷய்குமார், பூமி பெட்னேகர், சாடியா கதீப், சஹேஜ்மீன் கவுர், தீபிகா கண்ணா மற்றும் ஸ்மிருதி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ரக்‌ஷா பந்தன்.

Akshay Kumar opens up about bond with sister Alka Bhatia

அண்ணன் - தங்கை பாசம் குறித்து எமோஷனல் நெகிழ்ச்சி டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீசாகிறது. இதே தேதியில் அமீர் கானின் லால் சிங் சத்தா படமும் வெளியாகவுள்ளதால் பாலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்கள் படத்தால் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே படத்தை புரொமோட் செய்ய அக்‌ஷய் குமார் தீவிரமாக களமிறங்கியுள்ளார். அந்த வகையில் தனியார் டிவி நிகழ்ச்சியில் அக்‌ஷய் குமார் கலந்து கொண்டார். அதில் அவரின் தங்கையான அல்கா பாட்டியாவின் ஆடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது.

அந்த ஆடியோவில் ஒரு நல்ல நண்பனாகவும் சகோதரனாகவும் தந்தையாகவும் நீங்க இருந்திருக்கீங்க என அல்கா பாட்டியா சொன்னதை கேட்டு அக்‌ஷய் குமார் நெகிழ்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து இருவரும் இருக்கும் புகைப்படங்கள் காட்டப்பட்டது. அதனை பார்த்து அக்‌ஷய்குமார் கண்ணீர் விட்டார்.

மேலும் அல்கா பிறப்பதற்கு முன் நாங்கள் ஒரு சின்ன வீட்டில் தான் இருந்தோம். அவள் பிறந்த பிறகு எல்லாம் மாறி விட்டது. அதேபோல் அண்ணன், தங்கை உறவைவிட பெரிது வேறு எதுவும் இல்லை எனவும் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார். அவரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ரக்‌ஷா பந்தன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில், தங்கையின் பாசமான வார்த்தைகளை கேட்டு நடிகர் அக்‌ஷய்குமார் கதறி அழுத சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்ஷய் குமார் தனது தங்கையை எப்போதும் தேவி என்று தான் அழைப்பார்.

ரக்ஷாபந்தன் படம் குடும்ப, காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ளது. ரக்ஷாபந்தன் பண்டிகை மற்றும் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அக்ஷய் குமார் 4 சகோதரிகளுக்கு அண்ணனாக நடித்துள்ளார்.வடஇந்தியாவில் சகோதர பாசத்தை கொண்டாடும் தினமான ரக்ஷாபந்தன் பண்டிகை நாளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X