Don't Miss!
- News
மேளங்கள் முழங்க.. பல்லக்கில் வெற்றிகரமாக பவனி வந்த தருமபுரம் ஆதீனம்.. எந்த எதிர்ப்பும் இல்லை!
- Automobiles
இந்தியாவின் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கங்கனா ரனாவத்.. நாட்டுல இந்த காரை கொஞ்சம் பேருதான் யூஸ் பண்றாங்க!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரிலீசுக்கு தயாராகும் அக்ஷய்குமார் படம்… யுத்தம் ரத்தம் என மிரட்டும் “ பிரித்திவிராஜ் “ பட ட்ரெயிலர்
மும்பை : அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கும் பிரித்விராஜ் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
பீரியட் படமாக உருவாகியுள்ள இந்த படம் இந்திய மன்னர்கள் காலகட்டத்தில் வாழ்ந்த பிரிதிவிராஜ் சவுகான் எனும் மன்னனின் உண்மை கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது
பல மாதங்களாக காத்துக் கொண்டிருந்த பிரித்திவிராஜ் படத்தின் டிரைலர் வெளியாகி பலரின் புருவங்களை உயர்த்தும் படி செய்துள்ளது.
Cook with Comali : மாஸா என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன்…குஷியில் ரசிகர்கள் !

பிரித்திவிராஜ் மன்னனின் கதை
நடிகர் அக்ஷய் குமார் பல உண்மை கதாபாத்திரங்களின் கதைகளில் நடித்துள்ளார். அந்த வகையில் பிரித்திவிராஜ் படத்தில் பிரிதிவிராஜ் சவுகான் மன்னனாக நடித்துள்ளார். படத்தின் ட்ரைலர் இன் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது . பிரித்திவிராஜ் மன்னனாக வரும் அக்ஷய்குமார் டெல்லி மன்னராக முடிசூட்டப் படுகிறார். அவரது வீர சாகச கதைகளை சொல்லி காட்சிகள் விரிகின்றன. நடிகர் சோனு சூட் அவரது நம்பிக்கையாளனாக தோன்றுகிறார். முகமது கோரி ஆக Manav vij மிகவும் ஆக்ரோஷமாக களமிறங்குகிறார். முகமது கோரி டெல்லியின் மீது யுத்தம் அறிவிக்கிறார். அதை எதிர்கொள்ள பிரித்திவிராஜ் மன்னன் தயாராகிறார். அதைத் தொடர்ந்து சில பரபரப்பான காட்சிகள். ட்ரெய்லரில் வரும் இந்த காட்சிகள் அனைத்தும் மிகப்பிரம்மாண்டமாக படம் எடுக்கப்பட்டிருப்பது தெரிவிக்கிறது. பாகுபலி படத்தை நினைவுபடுத்தும் பல காட்சிகள் இதில் இருக்கிறது. இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது.

பிரித்திவிராஜ் - அக்ஷய் குமார் - மோடி
நேற்று நடந்த பிரித்விராஜ் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மீடியாக்களின் பல கேள்விகளுக்கு நடிகர் அக்ஷய்குமார் பதிலளித்துள்ளார். அதில் ஒரு குறிப்பிட்ட கேள்வி இந்திய பிரதமரான நரேந்திர மோடியை குறிப்பிட்டு கேட்கப்பட்டுள்ளது. பிரித்திவிராஜ் திரைப்படம் பல வரலாற்று சிறப்பு மிக்க காட்சிகளை கொண்டுள்ளது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்திய பிரதமர் மோடிக்கு இப்படத்தை ஸ்பெஷல் ஸ்கிரீனிங் போட்டுக் கட்டப்படுமா என கேட்க, அக்ஷய்குமார் அதற்கு மிகவும் சாதுரியமாக பதிலளித்துள்ளார். " அவர் பார்க்க விருப்பப்பட்டால் காண்பிக்கப்படும். அவர் விருப்பப்படவில்லை என்றால் காண்பிக்கப்படாது. எல்லாம் அவர் விருப்பம் " என பதில் அளித்துள்ளார்.

நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள்
மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள பிரித்திவிராஜ் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தில் அக்ஷய்குமார் கதாநாயகனாக நடிக்க மனுஷி சில்லர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர்களோடு சோனு சூட் மற்றும் சஞ்சய்தத் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். Chandra prakash dwivedi படத்தை இயக்கியுள்ளார். வரலாற்று படமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை தயாரித்தவர் யாஷ் ராஜ் பிலிம்ஸ். பிரித்விராஜ் படம் பல இன்னல்களை கடந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஜூன் மாதம் மூன்றாம் தேதி உலகெங்கிலும் ரிலீசாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு நேரடியாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

அக்ஷய் குமாரின் வேகம்
பொதுவாக ஒரு பெரிய நடிகர் ஒரு படத்தை முடிக்க பல மாதங்கள் எடுத்து கொள்வார். இதனால் தயாரிப்பாளருக்கு வட்டி அதிகமாகி அதனால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். ஆனால் அக்ஷய் குமார் தான் நடிக்கும் படங்களின் நாட்களை சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாகி இருக்கிறார். நேற்று பிரித்திவிராஜ் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டில் பேசிய இவர் நான் ஒரு படத்தை நடித்து முடிக்க 3 -4 மாதங்கள் எடுத்துக் கொள்வதில்லை. வெறும் 40 நாட்களில் படத்தை முடித்து விடுவேன். இந்தப் படத்தில் நடிக்க நான் எடுத்துக்கொண்ட நாட்கள் வெறும் 42. நீங்கள் வேண்டுமானால் இயக்குனரை கேளுங்கள் என பதில் அளித்துள்ளார். இதுபோன்ற வரலாற்று திரைப்படத்தை 42 நாட்களில் நடித்து முடித்திருக்கிறார் என்பது சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிரித்திவிராஜ் திரைப்படம் அனைத்து ரசிகர்களையும் மகிழ்வித்து சூப்பர் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஜூனியர் என்டிஆர் பிறந்தநாள் ஸ்பெஷல்.. அனிருத் பண்ண தரமான சம்பவம்.. NTR 30 அறிவிப்பு வந்துடுச்சு!
-
வசூல் முக்கியமில்லை.. பாராட்டுற மாதிரி படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ரஜினி, விஜய், அஜித்?
-
தனுஷுடன் படுக்கையறை காட்சிக்கு எத்தனை டேக்?.. ரசிகரின் விவகாரமான கேள்வி.. கூலாக பதிலளித்த மாளவிகா!