நிர்வாண போட்டோக்களை அனுப்பு.. அக்ஷய் குமார் மகளுக்கே இந்த நிலைமையா.. அதிர்ச்சியான ரசிகர்கள்!
மும்பை: நடிகர் அக்ஷய் குமார், சைபர் குற்றங்களின் ஆபத்து குறித்து, தனது 13 வயது மகள் நித்தாராவின் அனுபவத்தை உதாரணமாகக் கூறி எச்சரித்துள்ளார். ஆன்லைன் கேமிங் மூலம் குழந்தைகள் சந்திக்கும் அச்சுறுத்தல்களை அவர் சுட்டிக்காட்டினார்.
சில மாதங்களுக்கு முன்பு, தனது மகள் ஆன்லைன் கேமிங்கில் ஈடுபட்டிருந்தபோது, ஓர் அடையாளம் தெரியாத நபர் தனது மகளின் நிர்வாண புகைப்படங்களைக் கோரியதாக அக்ஷய் குமார் தெரிவித்தார். இந்த நிகழ்வை, மும்பையில் நடைபெற்ற சைபர் விழிப்புணர்வு மாதம் 2025 தொடக்க விழாவில் அவர் பகிர்ந்து கொண்டார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமாரின் மகளுக்கே இப்படியொரு நிலைமை என்றால் சாதாரண வீட்டுப் பெண் பிள்ளைகளின் நிலை இந்த சைபர் கிரைம் குற்றவாளிகளால் எப்படியெல்லாம் சீரழிகிறதோ என்கிற அச்சம் எழுகிறது என பலரும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
ஸ்மார்ட் போனும் சைபர் கிரைமும்: தொழில்நுட்பம், படிப்பு, ஏஐ எல்லாமே அறிவை வளர்த்துக் கொள்ளவும் வாழ்க்கையை மேலும், வளமானதாக மாற்றவுமே உதவ வேண்டும். ஆனால், ஸ்மார்ட் போன் வந்ததில் இருந்து அது தரும் பயன்களை விட பாதிப்பு அதிகமாகவே உள்ளது. தெரியாத லிங்கை க்ளிக் செய்தாலே நம்முடைய பணம் எல்லாம் பறிபோகும் அவல நிலை உள்ளதை போல குழந்தைகளின் மனதை கெடுக்கும் விதமான ஆபாச ஏஐ எடிட்டுகளும், முகம் தெரியாத சைபர் குற்றவாளிகளின் அச்சுறுத்தல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. டெக் உலகம் டாக்ஸிக் மனிதர்களையே அதிகளவில் உற்பத்தி செய்து வருவது பலரது வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கிறது.
அக்ஷய் குமார் மகளுக்கே இந்த நிலைமை: "சில மாதங்களுக்கு முன் என் வீட்டில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் மகள் ஒரு வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தாள். சில வீடியோ கேம்களை மற்றவர்களுடன் சேர்ந்து ஆன்லைனில் விளையாடலாம். அதில் ஒரு அந்நியனுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அவளுக்கு ஏற்பட்ட கொடுமை ரொம்பவே மோசம்," என அக்ஷய் குமார் விவரித்தார்.

நிர்வாண போட்டோக்களை அனுப்பு: அவர் மேலும் கூறுகையில், "ஆன்லைனில் கேம் விளையாடும்போது, ஒரு மெசேஜ் மகளுக்கு வந்தது, 'நீங்கள் ஆணா, பெண்ணா?' என்று. அவள் 'பெண்' என்று பதிலளித்தாள். பின்னர் அந்த அந்நியன், 'உன் நிர்வாணப் போட்டோக்களை அனுப்ப முடியுமா?' என்று கேட்டான். என் மகள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக விளையாட்டை நிறுத்திவிட்டு என் மனைவியிடம் சொன்னாள். இதுபோன்ற நிகழ்வுகள் தான் சைபர் குற்றங்களின் ஆரம்பம்," என்றார்.
சைபர் கிரைம் மோசமாகி வருகிறது: சைபர் கிரைம்கள் மற்ற குற்றங்களை விடப் பெரியதாக வளர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டிய அக்ஷய், மகாராஷ்டிராவில் 7, 8, 9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாராந்திர 'சைபர் வகுப்பு' அவசியம் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் கோரிக்கை விடுத்தார். இக்குற்றத்தைத் தடுப்பது மிகவும் முக்கியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
அரசுக்கு கோரிக்கை: டிஜிட்டல் உலகில் பாதுகாப்பாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க, பள்ளி மாணவர்களுக்கு (7-10) இணையக் கல்வியை வாராந்திர பாடமாகச் சேர்க்க வேண்டும் என்றும் நடிகர் அக்ஷய் குமார் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மாநில காவல்துறை இயக்குநர் ஜெனரல் ரஷ்மி சுக்லா, ஐ.பி.எஸ் அதிகாரி இக்பால் சிங் சஹல் மற்றும் ராணி முகர்ஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சமீபத்தில், நடிகை ஐஸ்வர்யா ராயும் தனது ஆபாச படங்கள் சோஷியல் மீடியாவில் பரவி வருவதாக சில யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடர்ந்தார். சாய் பல்லவியின் ஏஐ பிகினி போட்டோக்களும் சமீபத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











