»   »  சூப்பர் ஸ்டார் மனைவி என்று தெரிந்தும் பாலியல் தொல்லை கொடுத்த பணக்காரன்!

சூப்பர் ஸ்டார் மனைவி என்று தெரிந்தும் பாலியல் தொல்லை கொடுத்த பணக்காரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: படங்களில் கையால் குத்தி சுவரை பெயர்க்கும் நபரின் மனைவியாக இருந்தும் நான் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளேன் என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கன்னா தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டில் பிரபலமாக உள்ள சீனியர் நடிகர் சரத்குமாரின் மகளாக இருந்தும் வரலட்சுமியிடம் தொலைக்காட்சி சேனல் ஒன்றின் நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவு தலைவர் தவறாக பேசியுள்ளார்.

அதே போன்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மனைவிக்கும் நடந்துள்ளது. இது குறித்து அவர் தனது பிளாக்கில் கூறியிருப்பதாவது,

கண்ணீர்

கண்ணீர்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காரில் சென்றபோது என் போனில் வந்த மெசேஜால் நான் அழுதுவிட்டேன். ஒரு பணக்கார, அதிகாரம் படைத்த கிளையன்ட் பல மாதங்களாக எனக்கு தொல்லை கொடுத்தார்.

முடியாது

முடியாது

அந்த கிளையன்ட் எதை மனதில் வைத்து எனக்கு தொல்லை கொடுக்கிறார் என்று புரிந்தும் புரியாதது போன்று நடித்தேன். ஏனென்றால் என் வேலையை மட்டும் செய்து முடிக்க விரும்பினேன்.

பெண்கள்

பெண்கள்

இந்திய தேசிய பார் அசோசியேஷன் நடத்திய கருத்துக்கணிப்பின்படி பணியிடத்தில் 38 சதவீத பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள். அதில் நானும் ஒருத்தி.

நடிகர்

நடிகர்

படங்களில் வெறும் கையால் குத்தி சுவரை பெயர்க்கும் நபரின் மனைவியாக இருந்தும் நானும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளேன். அப்படி இருக்கும்போது வேலைக்கு செல்லும் சாதாரண பெண்களின் நிலையை நினைத்தால் பயமாக உள்ளது என்று ட்விங்கிள் தெரிவித்துள்ளார்.

English summary
Twinkle Khanna, who is the wife of Bollywood superstar Akshay Kumar too faced molestation at her workplace. And the most shocking thing was that the molester knew that she was Akshay Kumar's wife and despite that he had the guts to harass her in a sexual manner.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil