Don't Miss!
- Sports
ரஞ்சி கிரிக்கெட்டில் அசத்திய ஜடேஜா.. பந்துவீச்சில் விக்கெட் வேட்டை.. கம்பீருக்கு தக்க பதிலடி
- News
அதிமுக கூட போய் கேட்கலையாமே.. ஈரோட்டில் விஜயகாந்திற்கு இருக்கும் "வாய்ஸ்".. தேமுதிகவின் புது ரூட்?
- Finance
3000 ஊழியர்கள் பணிநீக்கம்.. SAP அறிவிப்பால் டெக் ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அடுத்த சர்ச்சையை கிளப்புமா அக்ஷய் குமாரின் ’ராமர் பாலம்’ திரைப்படம்.. டிரைலரிலேயே இவ்ளோ இருக்கே?
சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி ராஜ ராஜ சோழன் பற்றிய பேச்சுக்களும், விவாதங்களும், சர்ச்சைகளும் கிளம்பிய நிலையில், அடுத்ததாக அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி உள்ள 'ராமர் பாலம்' (Ram Setu) திரைப்படத்தின் டிரைலர் தற்போது தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான பல படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்காத நிலையில், தீபாவளி வெளியீடாக வெளியாக உள்ள இந்த படம் அந்த குறையை போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமர் பாலத்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளராக இந்த படத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
அடுத்த
ஸ்டாப்
500
கோடி
தான்..
பொன்னியின்
செல்வன்
இதுவரை
செய்த
வசூல்
சாதனை
எவ்வளவு
தெரியுமா?

சினிமாவும் சர்ச்சையும்
சினிமாவில் அரசியல் ரீதியான வசனங்களும், சர்ச்சைக்குரிய விஷயங்களும் அடிக்கடி கிளம்பி ஒட்டுமொத்த தேசத்தையும் விவாதிக்க வைத்து விடுகின்றன. சமீபத்தில் வெளியான மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் ராஜ ராஜ சோழன் யார் என்பதை மட்டும் அறிய வைக்க முயற்சி செய்யாமல், ராஜ ராஜ சோழன் இந்துவா? சைவமா? என்கிற விவாதத்தையும் அதிகமாகவே கிளப்பியது. பிரபாஸின் ஆதிபுருஷ் டீசர் வெளியான நிலையிலும் சர்ச்சைகள் வெடித்தன. இந்நிலையில், லைகா நிறுவனம் வெளியிடவுள்ள ராமர் பாலம் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

ராமர் பாலம்
ராமாயண இதிகாசத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு சென்று சீதையை மீட்க, வானரங்களின் உதவியோடு கட்டப்பட்ட பாலம் தான் ராமர் பாலம் என்றும் 7000 வருடங்களுக்கு முந்தைய பழமையான பாலம் இன்றும் இருக்கிறது. அதை கண்டுபிடிக்க வேண்டும் என்கிற முயற்சியோடு களமிறக்கப்படும் குழுவில் விஞ்ஞானியாக வருகிறார் அக்ஷய் குமார்.

கடலில் மிதக்கும் கல்
கடலில் மிதக்கும் கல்லைப் போட்டுத் தான் இப்படியொரு பாலத்தை அப்போது ராமர் கட்டினார் என ராமாயணத்தில் கூறப்படும் நிலையில், அப்படியொரு கல்லை தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு அக்ஷய் குமார் கரையேறி வருவது போல உள்ள டிரைலர் கிளைமேக்ஸ் காட்சி ராம பக்தர்களை கண்டிப்பாக கூஸ்பம்ப்ஸ் அடையச் செய்யும். ஆனால், அதே நேரம் ஏகப்பட்ட சர்ச்சைகளையும் இந்த படம் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரெஷர் ஹண்ட் போல
பிரம்மாஸ்திரம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இந்துக்களின் இதிகாச சக்தியான பிரம்மாஸ்திரம், நாகாஸ்திரம், வானர அஸ்திரம் என அஸ்திரங்கள் பற்றியும் சிவன் பற்றியும் பேசியிருந்த நிலையில், ராமாயணத்தை மையமாக கொண்ட டிரெஷர் ஹண்ட் படம் போல இந்த ராமர் பாலம் உருவாகி இருக்கிறது. ஹாலிவுட் படங்களை போல இந்திய இதிகாசங்களை கொண்டு ஏகப்பட்ட படங்கள் உருவாக ஆரம்பித்துள்ளன.

தீபாவளி ரிலீஸ்
தீபாவளிக்கு
சிவகார்த்திகேயனின்
பிரின்ஸ்,
கார்த்தியின்
சர்தார்
உள்ளிட்ட
படங்கள்
வெளியாக
உள்ள
நிலையில்,
பான்
இந்திய
திரைப்படமாக
ராமர்
சேது
பல்வேறு
இந்திய
மொழிகளில்
வெளியாகிறது.
இயக்குநர்
அபிஷேக்
சர்மா
இயக்கி
உள்ள
இந்த
படத்தில்
அக்ஷய்
குமார்,
நாசர்,
ஜாக்குலின்
ஃபெர்னாண்டஸ்
உள்ளிட்ட
பிரபலங்கள்
நடித்துள்ளனர்.
தீபாவளி
பண்டிகையை
முன்னிட்டு
வரும்
அக்டோபர்
25ம்
தேதி
தியேட்டர்களில்
இந்த
படம்
வெளியாகிறது.