Don't Miss!
- News
கலெக்டரை மாத்துங்க.. பணப் பட்டுவாடா ஜரூர்.. அமைச்சர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக தேமுதிக புகார்!
- Technology
வீட்டுல இருக்குற எல்லோருக்கும் 1 வாங்கும் விலையில் அறிமுகமான Noise இயர்பட்ஸ்!
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Sports
ரோகித்திற்கு பெரிய சம்பவம் இருக்கு.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. முன்னாள் பயிற்சியாளர் சுவாரஸ்ய தகவல்!
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்திக்கு போகும் சூர்யாவோட சூப்பர்ஹிட் படம்... யார் நடிக்கப் போறாரு பாருங்க
மும்பை : நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சூரரைப் போற்று.
இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசான நிலையிலும், சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்தது.
இந்நிலையில் இந்தப் படம் இந்தியில் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை
கடத்தல்
வழக்கு...மொபைல்
போன்களை
ஒப்படைக்க
திலீப்பிற்கு
கோர்ட்
உத்தரவு

சூரரைப் போற்று படம்
நடிகர் சூர்யா, அபர்ணா முரளி, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருந்த படம் சூரரைப் போற்று. கடந்த ஆண்டில் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்ற இந்தப் படம் சூர்யாவிற்கு மட்டுமின்றி இறுதிச் சுற்று படத்திற்கு பிறகு சுதா கொங்குராவிற்கும் சிறப்பாக கைக்கொடுத்தது.

சூர்யா தயாரிப்பு
ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவானது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தால் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும் என்று விமர்சகர்கள் கூறுமளவிற்கு இந்தப் படம் அமைந்திருந்தது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்தப் படம் மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறந்த இந்திய படத்திற்கான விருதை தட்டிச் சென்றது. ரசிகர்கள், விமர்சகர்கள் கொண்டாட்டத்திற்கு உள்ளான இந்தப் படம் இதுபோன்ற விருதுகளையும் பெற்றது படத்திற்கு சிறந்த சிறப்பை பெற்றுத் தந்தது.

சாதனை படைத்த பாடல்
மேலும் இந்தப் படத்தில் இடம்பெற்ற காட்டுப்பயலே பாடல் 100 மில்லியன் வியூக்களை தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்தப் பாடலுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில், சினேகன் எழுதிய இந்தப் பாடலை பாடியிருந்தார் தீ.

இந்தியில் ரீமேக்
இந்தப் படத்திற்கு கிடைத்த சிறப்புகளை அடுத்து தற்போது இந்தப் படத்தை பாலிவுட்டிலும் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கேரக்டரில் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெற்றிக்கான கனவு
சூரரைப் போற்று படத்தில் வித்தியாசமான சூர்யாவை பார்க்க முடிந்தது. சாதாரண மனிதனின் வெற்றிக்கான கனவை அவர் கண் முன்னே கொண்டு வந்திருந்தார். படத்தில் அபர்ணா முரளியின் நடிப்பும் சிறப்பாக அமைந்திருந்தது. இந்நிலையில் இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆவது சிறப்பாக பார்க்கப்படுகிறது.