ஜெயலலிதாவின் ஆசையை பாதி நிறைவேற்றிய விஜய்
சென்னை: தலைவி படத்தில் கங்கனா ரனாவத்தை நடிக்க வைப்பதன் மூலம் ஜெயலலிதாவின் ஆசையில் பாதியை நிறைவேற்றியுள்ளார் இயக்குநர் ஏ.எல். விஜய்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் படமாக எடுக்கிறார் இயக்குநர் ஏ.எல். விஜய். அந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கிறார்.
தலைவி படத்தில் நடிக்க கங்கனாவுக்கு ரூ. 24 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. வாங்கிய காசுக்கு மேலேயே அவர் நடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

அதிருப்தி
தமிழ் பேசும் நடிகைகளை எல்லாம் விட்டுவிட்டு இந்த விஜய் இந்திக்கார நடிகையை அதுவும் கோடி, கோடியாய் கொட்டிக் கொடுத்து நடிக்க வைக்கிறாரே என்று பலரும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராய்
என் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டால் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் என் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஜெயலலிதா பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அவர் ஆசையில் பாதி நடந்துள்ளது. ஐஸ்வர்யா ராய் இல்லை ஆனால் பாலிவுட் நடிகை தான் நடிக்கிறார்.

அனுஷ்கா சர்மா
நயன்தாரா அல்லது அனுஷ்கா சர்மா அல்லது ஐஸ்வர்யா ராய் ஜெயலலிதாவாக நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். விஜய் காரணம் இல்லாமல் கங்கனாவை நடிக்க வைக்க மாட்டார். பொறுத்திருந்து தான் பார்ப்போமே.

அயர்ன் லேடி
ப்ரியதர்ஷினி இயக்கும் தி அயர்ன் லேடி படத்தில் நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். அந்த பட போஸ்டரில் நித்யாவை பார்த்தபோதே கிட்டத்தட்ட ஜெயலலிதாவை பார்த்தது போன்று இருந்தது. பார்க்கலாம், கங்கனாவா, நித்யாவா என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











