»   »  மீண்டும் கேரள நடிகையுடன் திருமணமா?: இயக்குனர் விஜய் விளக்கம்

மீண்டும் கேரள நடிகையுடன் திருமணமா?: இயக்குனர் விஜய் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனக்கு இரண்டாவது திருமணம் என்று வெளியான செய்திகள் குறித்து இயக்குனர் ஏ.எல். விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

காதலித்து திருமணம் செய்த இயக்குனர் ஏ.எல். விஜய்யும், நடிகை அமலா பாலும் பிரிந்தனர். அண்மையில் அவர்களுக்கு விவாகரத்து அளித்து தீர்ப்பளித்தது சென்னை குடும்பநல நீதிமன்றம்.

இந்நிலையில் விஜய்யின் இரண்டாவது திருமண பேச்சுக்கள் கிளம்பின.

2வது திருமணம்

2வது திருமணம்

விஜய்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஏற்பாடு செய்வதாகவும், கேரளாவை சேர்ந்த பிரபல நடிகையை அவருக்கு மனைவியாக்க முயற்சி நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

விஜய்

விஜய்

என் 2வது திருமணம் பற்றி வெளியான சில வதந்திகளை பார்த்து வருத்தம் அடைந்தேன். இது ஆதாரம் அற்ற செய்தி. இது போன்ற ஆதாரமற்ற செய்திகள் என்னை மிகவும் பாதிக்கின்றன என்று விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

வதந்திகள்

வதந்திகள்

என் வளர்ச்சியில் மீடியாவுக்கு பெரும் பங்கு உள்ளது. அதனால் இது போன்ற வதந்திகளை தவிர்க்குமாறு கேட்கும் உரிமை உள்ளது என்று நினைக்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்.

நன்றி

நன்றி

ரசிகர்கள் மற்றும் மீடியாவுக்கு நல்ல கருத்து உள்ள படங்களை அளிக்க விரும்புகிறேன். அத்தகைய படங்களை கொடுக்க கடுமையாக உழைப்பேன். நன்றி என விஜய் விளக்கம் கொடுத்துள்ளார்.

English summary
Director AL Vijay has explained that the news about his remarriage is definitely not true.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil