twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மிசிஸிபி பர்னிங், எவிடா படங்களை இயக்கியவர்.. பிரிட்டீஸ் இயக்குனர் காலமானார்..திரையுலகம் இரங்கல்!

    By
    |

    லண்டன்: பிரபல இயக்குனர் காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரபல பிரீட்டீஸ் பட இயக்குனர் ஆலன் பார்கர். பிரிட்டனின் சக்சஸ்புல் இயக்குனர்களும் இவரும் ஒருவர் என்கிறார்கள்.

    Alan Parker, director of Bugsy Malone and Mississippi Burning, dies at 76

    மிட்நைட் எக்ஸ்பிரஸ், ஃபேம், ஷூட் இன் த மூன், பேர்டி, த கமிட்மென்ட்ஸ், எவிடா, மிசிஸிபி பர்னிங் உட்பட பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

    மிசிஸிபி பர்னிங் படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஜெனி ஹேக்மன், வில்லியம் டஃபோ நடித்த இந்தப் படம், 1960 களில் காணாமல் போன 3 மனித உரிமை ஆர்வலர்களை பற்றி புலனாய்வு செய்யும் கதையை கொண்டது. இந்தப் படம் 7 ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டு ஒரு விருதை பெற்றது.

    Recommended Video

    கொரோனா.. இறைவன் ரிலீஸ் செய்த படம்.. வைரலாகும் வடிவேலுவின் வீடியோ!

    ஹீரோ.. வில்லன்.. குணசித்திர கதாபாத்திரம் என கலக்கும் துரை சுதாகர் !ஹீரோ.. வில்லன்.. குணசித்திர கதாபாத்திரம் என கலக்கும் துரை சுதாகர் !

    ஆலன் பார்கர் கடைசியாக, த லைஃப் ஆ டேவிட் காலே என்ற படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு இது வெளியானது. பிறகு படங்கள் இயக்காமல் இருந்த அவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டது. வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட இந்த உடல் நலக்குறைவுக்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 76.

    இதை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைந்த ஆலன் பார்க்கரின் படங்கள் ஆஸ்கர் மற்றும் பல பிரீட்டீஸ் அகாடமி விருதுகளைப் பெற்றுள்ளன. அவர் மறைவை அடுத்து அவருடன் பணியாற்றிய திரையுலகினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Alan Parker, who also directed Fame, Mississippi Burning, Evita, The Commitments and other successful movies, died after a lengthy illness.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X