»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரதமர் வாஜ்பாயின் கவிதைகள் தொடர்பான ஒரு வீடியோ ஆல்பத்தில், அவருடன் இணைந்து பார்த்திபன்-சீதாதம்பதியின் மகள் கீர்த்தனா நடிக்கிறாள்.

மணிரத்னத்தின் "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் அறிமுகமான கீர்த்தனா, அப்படத்தில் தன்னுடையசுட்டித்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தாள்.

இந்த சுட்டிக்கு இப்போது வாஜ்பாயுடன் இணைந்து நடிக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்டு 15ம் தேதி வாஜ்பாயின் கவிதைகள் தொடர்பாக ஒரு ஆல்பம்வெளியாகவுள்ளது.

இந்த ஆல்பம் தொடர்பான படப்பிடிப்பு இன்று (மே, 13) டெல்லியில் உள்ள வாஜ்பாயின் வீட்டில் நடக்கிறது.அப்போது அவருடன் கீர்த்தனாவும் இணைந்து நடிக்கிறாள்.

வாஜ்பாயிடம் கீர்த்தனா கொடியை விற்பனை செய்வது போன்ற காட்சி இந்த ஆல்பத்திற்காகப்படமாக்கப்படுகிறது.

பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் தயாராகும் இந்த ஆல்பத்தை முன்னாள்நடிகர்-தயாரிப்பாளரான கே. பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜி தயாரிக்கிறார்.

ஏற்கனவே வாஜ்பாயின் பல கவிதைகள் வீடியோ ஆல்பங்களாக்கப்பட்டுள்ளன. ஒரு ஆல்பத்தில் நடிகர் ஷாரூக்கானும் நடித்துள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil