யூ டூ ஐஸ்.. சர்ச்சையில் சிக்கிய அலேகா பட போஸ்டர்.. என்ன சொல்கிறார் ஆரி?

நடிகர் ஆரி - ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படத்திற்கு அலேகா என பெயரிடப்பட்டுள்ளது.

சென்னை: அலேகா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சையில் சிக்கியது குறித்து நடிகர் ஆரி விளக்கம் அளித்துள்ளார்.

மாலை பொழுதின் மயக்கத்திலே', 'நெடுஞ்சாலை', மாயா உள்ளிட்ட படங்களில் நடித்த ஆரி, பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தாவுடன் ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அலேகா என பெயர் வைத்துள்ளனர்.

'இது ஒரு காதல் படம். முன் காலத்தில் காதலுக்கு எதிரியாக ஜாதி, மதம் மற்றும் அந்தஸ்து இருந்தது. ஆனால், இப்போது காதலுக்கு காதலே எதிரியாக இருக்கிறது' என்ற கருத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்:

பர்ஸ்ட் லுக் போஸ்டர்:

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று நடிகர் ஆரியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. ஆரி படத்தின் போஸ்டரா இது என கேட்கும் அளவுக்கு படுகவர்ச்சியாக போஸ்டர் இருந்தது.

ஆரி விளக்கம்:

ஆரி விளக்கம்:

இதுகுறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து நடிகர் ஆரி விளக்கம் அளித்துள்ளார். அதில், காமத்தை வியாபாரமாக்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் இல்லை இது என அவர் தெரிவித்துள்ளார்.

காதலர் தினம் ஸ்பெஷல்:

காதலர் தினம் ஸ்பெஷல்:

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, " சிறுவயது முதலே காதலர் தினமும் காதலும் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டது. நானே மறந்தாலும் அதுவே ஞாபகப்படுத்திவிடும். ஏனென்றால், காதலர் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் என் பிறந்தநாள். ஆனால், இந்த வருட பிறந்தநாளுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. அது நான் நடிக்கும் 'அலேகா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக், என் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாவதில் பெருமைதான் .

காமம் இல்லா காதல் இல்லை:

காமம் இல்லா காதல் இல்லை:

இது, காமத்தை வியாபாரமாக்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் இல்லை. இது காதலின் உயர்வை சொல்லும் படம் காதலின் தெரிவே காமத்தின் தொடக்கம். காதல் இல்லா காமமும் இல்லை. காமம் இல்லா காதலும் இல்லை.

உங்கள் காதல் கதை:

உங்கள் காதல் கதை:

ஆனால் காமத்தில் வரும் காதல் காலம்தாண்டி வாழ்வது இல்லை. காதலில் வரும் காமம்தான் காலம்தாண்டி வாழும். இது எங்கள் கதை அல்ல உங்கள் காதல் கதை." என்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து நடிகர் ஆரி விளக்கமளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X