“சீக்கிரமே அவங்களுக்கு கல்யாணம்”.. அவசரப்பட்டு உளறிக் கொட்டிய பிரபல நடிகை.. கோபத்தில் இளம் நடிகை!

நடிகர் ரன்பீர் கபூரும், நடிகை ஆலியா பட்டும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Deepika Padukone Reveals Alia Ranbir Marriage date

மும்பை: நடிகர் ரன்பீர் கபூரும், நடிகை ஆலியா பட்டும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகும் விஷயத்தை நடிகை தீபிகா படுகோன் வாய்த்தவறி உளறிவிட்டார்.

இந்திய சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியை இணைய ஊடகம் ஒன்று சமீபத்தில் நடத்தியது. விஜய் சேதுபதி, விஜய் தேவரகொண்டா, ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஆயுஷ்மான் குரானா, பார்வதி திருவொத்து, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலின் போது, நடிகர் விஜய் வேதரகொண்டாவிடம் இந்திய சினிமா நடிகர்களில் யாரிடம் இருந்து ஆலோசனை பெற விரும்புகிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு விஜய் பதில் அளிக்கையில், தீபிகா மற்றும் ஆலியா மீது தனக்கு அளவுகடந்த காதல் இருப்பதாகக் கூறினார்.

உளறிய தீபிகா

உளறிய தீபிகா

இதை கேட்ட தீபிகா டக்கென குறிக்கிட்டு தனக்கு திருமணம் ஆகிவிட்டதை விஜய் தேவரகொண்டாவுக்கு நினைவுபடுத்தினார். அதோடு சைடு கேப்பில், ஆலியாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது என்ற செய்தியை வாய்த்தவறி உளறிவிட்டார்.

ஆலியா அதிர்ச்சி

ஆலியா அதிர்ச்சி

தீபிகா இப்படி சொன்னதை கேட்ட ஆலியா செமையாக அதிர்ச்சி ஆகிவிட்டார். "இப்போது ஏன் இதை பற்றி பேச வேண்டும்", என தீபிகாவிடம் கோபப்பட்டார். இதனால் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.

சமாளித்த தீபிகா

சமாளித்த தீபிகா

இப்படி வாய்விட்டு மாட்டிக்கொண்டோமே என தீபிகாவுக்கும் தர்மசங்கடமாகிவிட்டது. இதையடுத்து அவர், ஆலியாவை பற்றி உயர்த்தி பேசி, சிரித்து மலுப்பி நிலைமையை சமாளித்தார். இருந்தாலும் தீபிகா கூறியது ஹைலைட்டாகிவிட்டது.

உறுதியான திருமணம்

உறுதியான திருமணம்

நடிகை ஆலியா பட்டும், ரன்பீர் கபூரும் காதலிப்பதாக ஏற்கனவே ஒரு தகவல் பாலிவுட்டில் உலா வருகிறது. சமீபத்தில் நடந்த ரன்பீர் கபூரின் உறவினர் வீட்டு விஷேசத்திலும் ஆலியா கலந்துகொண்டார். இந்த சூழலில் தீபிகா இந்த உளறல், ஆலியா - ரன்பீரின் திருமணத்தை உறுதி செய்துள்ளதாகவே பாலிவுட்டில் பேசப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X