»   »  அதுக்கு வேற ஆளை பாருங்க: பிரபாஸை அதிர வைத்த ஆலியா பட்

அதுக்கு வேற ஆளை பாருங்க: பிரபாஸை அதிர வைத்த ஆலியா பட்

Posted By:
Subscribe to Oneindia Tamil
அதுக்கு வேற ஆளை பாருங்க: பிரபாஸை அதிர வைத்த ஆலியா பட்- வீடியோ

ஹைதராபாத்: பிரபாஸின் சாஹோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்துள்ளார் ஆலியா பட்.

பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. இந்த படத்தில் பிரபாஸுக்கு அனுஷ்காவை ஜோடியாக்க நினைத்தார்கள். ஆனால் அது முடியாமல் போனது.

அதன் பிறகு பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரை ஒப்பந்தம் செய்தனர்.

பிரபாஸ்

பிரபாஸ்

அனுஷ்கா இல்லை என்று தெரிந்த பிறகு பாலிவுட் நடிகை ஆலியா பட்டை நடிக்க வைக்க விரும்பி அவரை அணுகியுள்ளனர். இந்த செய்தி அறிந்த ஆலியாவின் குருவான இயக்குனர் கரண் ஜோஹார் குஷியாகிவிட்டார்.

அறிமுகம்

அறிமுகம்

பிரபாஸ் படத்தில் நடித்தால் ஆலியா பட் தென்னிந்திய திரையுலகில் கால் பதிக்கலாம் என்று கரண் நினைத்தார். இதனால் அந்த படத்தில் ஆலியாவை நடிக்க வைக்க எவ்வளவோ முயன்றார்.

ஹீரோயின்

ஹீரோயின்

சாஹோ படத்தில் ஹீரோயினுக்கு வேலை இல்லையாம். பிரபாஸை காதலித்து மரத்தை சுத்தி டான்ஸ் ஆடுவதே வேலை. இதை அறிந்த ஆலியா ஒப்புக்கு சப்பானி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் ஆலியா. இந்நிலையில் பிரபாஸ் படத்தில் நடித்து தனது இமேஜை டேமேஜாக்க அவர் விரும்பவில்லையாம்.

சம்பளம்

சம்பளம்

சாஹோ படத்தில் நடிக்க ஷ்ரத்தா கபூரும் உடனே சம்மதிக்கவில்லை. ஓவர் சம்பளம் கேட்டு அடம்பிடித்தார். அதன் பிறகு ஒரு வழியாக பேசி சம்பளத்தை கொஞ்சம் குறைத்து நடிக்க வைத்துள்ளனர்.

English summary
When Saaho was announced, everyone wanted Anushka Shetty to play the lead role in it. If reports are to be believed, she was the first choice for the Prabhas starrer. But Anushka could not do the film for some unknown reasons. Soon, Shraddha Kapoor was approached, and she gave the nod for the movie. But not many are aware that before Shraddha, Prabhas and the makers had decided to cast Alia Bhatt for the role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil