ஷங்கரின் அடுத்த பட நாயகி ஆலியாவா ?...டோலிவுட்டில் அதிகரிக்கும் பரபரப்பு

ஐதராபாத் : பல மொழிகளிலும் வாய்ப்புக்கள் குவிந்து வருவதால் பான் இந்தியன் நடிகையாகி வருகிறார் ஆலியா பட். அதிலும் ராம் சரணை வைத்து பிரம்மாண்ட டைரக்டரான ஷங்கர் இயக்க போகும், மெகா பட்ஜெட் படத்தில் ஆலியா பட் தான் ஹீரோயின் என்ற தகவல் தான் தெலுங்கு திரையுலகில் ஹாட் டாக்காக இருந்து வருகிறது.

ஆலியா பட், தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆலியாவின் நடிப்பை பார்த்து அசந்து போன் ராம் கிரண், தனது அடுத்த படத்திற்கு ஆலியாவையே ஹீரோயினாக்கும் படி கேட்டுள்ளாராம்.

இருவரின் தேர்வும் ஆலியா தான்

இருவரின் தேர்வும் ஆலியா தான்

இதற்கிடையில் பான் இந்தியன் ரசிகர்களை கவருவதற்காக பாலிவுட் நடிகை ஒருவரை தான் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என ஷங்கரும் நினைத்திருந்தாராம். தற்போது ராம் சரணே கேட்டு விட்டதால் ஆலியாவையே புக் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

ஷங்கருக்காக தான் வெயிட்டிங்

ஷங்கருக்காக தான் வெயிட்டிங்

தில் ராஜு தயாரிக்கும் இந்த படம், 2021 ம் ஆண்டு இறுதியில் துவங்கப்பட உள்ளது. இந்தியன் 2 பட விவகாரத்தில் சிக்கிக் கொண்டிருப்பதால் ஷங்கரின் தேதி கிடைக்காததால் தான் படம் துவங்குவது தாமதம் ஆகி வருகிறதாம். லைகா நிறுவனம் தொடர்ந்து வழக்கு வேறு நிலுவையில் உள்ளதாம் ராம் சரணின் பட வேலைகளை துவக்க படக்குழு தயங்கி வருகிறதாம்.

இந்தியன் 2 தான் இடிக்குது

இந்தியன் 2 தான் இடிக்குது

கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் வேலைகளை முடித்த பிறகு, ராம் சரணின் பெயரிடப்படாத படத்தில் ஷங்கர் கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கால் சிக்கல் ஏற்படுமோ என்பதால் தான் ஷங்கரும் தயங்கி வருவதாக கூறப்படுகிறது.

2022 வரை ஷங்கர் பிஸி

2022 வரை ஷங்கர் பிஸி

இந்தியன் 2 படத்தை முடித்த பிறகு ராம் சரண் நடிக்கும் படத்துடன் அந்நியன் இந்தி ரீமேக் பணியையும் ஷங்கர் துவங்க உள்ளார். இதனால் 2022 இறுதி வரை ஷங்கர் ரொம்ப பிஸி என்கிறார்கள். அந்நியன் இந்திய ரீமேக்கில் ரன்வீர் சிங் நடிப்பதும் இறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X