»   »  அந்த நடிகர் வேணாம்மா, நைசா நழுவிடுவார்: வாரிசு நடிகையை எச்சரிக்கும் தோழிகள்

அந்த நடிகர் வேணாம்மா, நைசா நழுவிடுவார்: வாரிசு நடிகையை எச்சரிக்கும் தோழிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரன்பிர் கபூருக்கும், ஆலியா பட்டுக்கும் காதல்!

மும்பை: அந்த ஆளு வேண்டாம்மா என்று நடிகை ஆலியா பட்டை அவருக்கு நெருக்கமானவர்கள் எச்சரித்து வருகிறார்களாம்.

பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து பிரிந்துவிட்டார். முன்பும் கூட பிரிந்து சேர்ந்துவிட்டனர். ஆனால் இம்முறை பிரிந்தது பிரிந்தது தான் என்று தீர்க்கமாக உள்ளனர்.

இந்நிலையில் ஆலியா பட் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக பேச்சாக உள்ளது.

ஆலியா பட்

ஆலியா பட்

ஆலியா பட் நடிகர் ரன்பிர் கபூரை காதலிப்பதாக கூறப்படுகிறது. இருவரும் சேர்ந்து அயன் முகர்ஜி இயக்கி வரும் பிரம்மாஸ்திரா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

டென்ஷன்

டென்ஷன்

நடிகை கத்ரீனா கைஃபை பிரிந்து சிங்கிளாக இருக்கும் ரன்பிர் கபூரும், ஆலியாவும் காதலிப்பதாக பாலிவுட் நம்புகிறது. ஆனால் இதை கேட்டு ரன்பிர் தான் செம டென்ஷனில் உள்ளாராம்.

கண்டுபிடி

கண்டுபிடி

ஆலியாவுடன் தன்னை சேர்த்து யார் வதந்தியை பரப்புவது என்று கண்டுபிடிக்குமாறு தனது உதவியாளர்களிடம் கூறியுள்ளாராம் ரன்பிர். இந்த வந்தியால் தன் பெயர் கெடுவதாக ரன்பிர் ஃபீல் பண்ணுகிறாராம்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

ரன்பிர் கபூர் வேண்டாம். அவர் ஒரு நாள் உன்னை கழற்றிவிட்டுவிடுவார் என்று ஆலியாவை அவருக்கு நெருக்கமானவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்களாம்.

அப்படியா?

அப்படியா?

ரன்பிருடன் காதல் பற்றி ஆலியா கூறியிருப்பதாவது, இது போன்ற செய்திகளை படித்து நான் கூட குழம்பிவிடுகிறேன். அமைதி காப்பது நல்லது என்று நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.(இதுக்கு பெயரு தான் நைசா நழுவுவதோ?)

English summary
According to sources, actress Alia Bhatt's friends are asking her to stay away from actor Ranbir Kapoor. It is rumoured that Alia and Ranbir seeing each other.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X