twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தியேட்டரில் மல்லிகைப் பூ வாசம்… குழந்தைகள் அழும் சப்தம் கேட்கிறது! நடிகர் கார்த்தி

    சென்னையில் நடைபெற்ற கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர்.

    |

    சென்னை: சென்னையில் நடைபெற்ற கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய சூர்யா, கார்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

    2டி எண்டர்ட்டெயின்மெண்ட் தயாரித்து பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் கடைக்குட்டி சிங்கம். இப்படத்தில் கார்த்தி சாயிஷா சத்தியராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் சூர்யா பிளாக்பஸ்டர் மேடைகளைப் பார்த்தே பல நாள் ஆகிவிட்டது, இந்த மேடையில் நிற்பதற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குனர் பாண்டிராஜைத் தவிற வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக இப்படத்தை இயக்கியிருக்க முடியாது எனப் புகழ்ந்தார்.

    மேலும், இந்தப்படம் சினிமாவின் மூலம் நல்ல செய்தியை சொல்ல முடியுமென்று நிரூபித்துள்ளது எனக் கூறினார். எல்லோரும் கமர்ஷியலாக படமெடுக்கட்டும், ஆனால் நாங்கள் 2டி மூலம், மக்களுக்கு கருத்து சொல்லும் தரமான பொழுதுபோக்கு படங்களைத்தான் எடுப்போம் எனக் கூறினார்.

    ஆதங்கம்

    ஆதங்கம்

    நமது தமிழ் நாட்டில் நிறைய டாக்டர்கள் , என்ஜினியர்கள் என்று பலர் உள்ளனர். ஆனால் ஒரு விவசாயியை கொண்டு வருவது கடினமான விஷயமாக உள்ளது என சூர்யா ஆதங்கப்பட்டார்.

    நல்ல படம்

    நல்ல படம்

    நிறைய பேர் நல்ல படம் ஜெயப்பதில்லை என்று சொல்கிறார்கள் ஆனால் அது பொய். நிஜமாகவே நல்ல படம் எடுத்தால் அது கண்டிப்பாக ஓடும். திரையரங்கில் மல்லி பூ வாசம் மற்றும் குழந்தைகள் அழும் சத்தம் கேட்கிறது என்று சொல்லும் போது படத்துக்கு அனைவரும் குடும்பத்தோடு வருகிறார்கள் என்று தெரிகிறது என்றார்.

    மஞ்சள்

    மஞ்சள்

    நாங்கள் ஸ்டாப் என்ற அமைப்பை தற்போது உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் வெள்ளைச் சர்க்கரையை எப்படி நிறுத்துவது, நாம் கம்மியாக உபயோகிக்கும் மஞ்சளை எப்படி நமது தினசரி வாழ்கையில் எடுத்து வருவது என்பதை பற்றியும், காய்கறிகளிலிருந்து என்னை எடுத்து உபயோகிப்பது மற்றும் தானியங்களின் முக்கியத்துவும் பற்றியும் இந்த அமைப்பு மக்களிடம் கொண்டுசேர்க்கும் என கார்த்தி தெரிவித்தார்.

    சத்தியராஜ்

    சத்தியராஜ்

    இந்த படத்தை முதலில் மக்கள் மீது அக்கரைக்கொண்டு நாட்டை பாதுக்காக்கிறோம் என்று சொல்லி , சொகுசாக தாங்கள் செல்ல மரங்களை வெட்டி சாலை அமைக்கும் குழுக்களுக்கு முதலில் போட்டு காட்ட வேண்டும். படத்தில் நாங்கள் அனைவரும் ஒருவருக்குஒருவர் போட்டி போட்டு நடித்தோம். படத்தில் எல்லோருக்கும் நன்றாக நடிக்க ஸ்கோப் இருந்தது. என சத்தியராஜ் கூறினார்.

    பாண்டிராஜ்

    பாண்டிராஜ்

    படத்தின் துவக்கத்தில் கார்த்தி சார் என்னுடைய கதாபாத்திரத்துக்கு சரியாக இருப்பாரா என்ற பயம் இருந்துகொண்டே இருந்தது. அவருடன் பயன் செய்ய ஆரம்பித்ததும் எல்லாம் சரியாக இருந்தது. யாரோ நான் நடிகர்களோடு கோபமாக இருப்பேன் என்ற புரளியை கிளப்பியுல்லார்கள். அது சுத்த பொய். படத்தில் இடம்பெற்ற ரேக்ளா ரேசை ரசிகர்கள் அனைவரும் ரசித்து கொண்டாடுகிறார்கள். அதை படத்தில் கொண்டுவர நானும் ராஜா சாரும் மிகவும் சிரமப்பட்டோம் எனக் கூறினார்.

    ஆடு மாடு

    ஆடு மாடு

    பீட்டாவை சேர்ந்தவர்கள் படத்தை பார்த்துவிட்டு 1 நிமிடத்தை நீக்கிவிட்டார்கள் எனத் தொடர்ந்த பாண்டிராஜ், எங்கள் ஆடு , மாடுகளை நாங்கள் அண்ணன் , தம்பியாக பார்த்து வருகிறோம். நானும் ஆடு , மாடு மேய்த்து வந்தவன் தான். எங்களை விட சிறப்பாக அவர்களை யாராலும் பார்க்க முடியாது. உங்களால் ஆட்டை அல்லது மாட்டை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓட்டி கூட்டி செல்ல முடியுமா ? கண்டிப்பாக முடியாது ? எங்கள் ஆடுமாடுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் யாரும் கவலை பட வேண்டாம் என தெரிவித்தார்.

    உதவி

    உதவி

    இந்த நிகழ்வின்போது விவசாயத்தை மேம்படுத்தவும், விவசாய ஆராய்ச்சிக்காகவும் ரூ.1 கோடி நிதியை நன்கொடையாக அகரம் பவுண்டேஷன் சார்பில் சூர்யா வழங்கினார். மேலும், பாரம்பரிய இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து வரும் ஐந்து விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து ஊக்குவிக்கும் விதமாக தலா ரூ. 2 லட்சத்தை வழங்கி அவர்களை சூர்யா கௌரவித்தார்.

    English summary
    2d entertainment productions Kadaikkutti Singam success meet held in Chennai. Surya proudly said he has been standing in a blockbuster stage after a long time. He donated Rs.1 crore fund for agriculture development and research in this event.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X