»   »  கடவுள் இருக்கான் குமாரால் ஆனந்திக்கும், நிக்கிக்கும் சண்டையா?: ராஜேஷ் விளக்கம்

கடவுள் இருக்கான் குமாரால் ஆனந்திக்கும், நிக்கிக்கும் சண்டையா?: ராஜேஷ் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடவுள் இருக்கான் குமாரு படப்பிடிப்பில் நாயகிகள் ஆனந்திக்கும், நிக்கி கல்ராணிக்கம் இடையே சண்டை என வெளியான தகவல்கள் குறித்து இயக்குனர் ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து ஹீரோவாக நடித்து வரும் படம் கடவுள் இருக்கான் குமாரு. படத்தில் ஆனந்தி, நிக்கி கல்ராணி என இரண்டு நாயகிகள்.


பிரகாஷ் ராஜ், மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.


சண்டை

சண்டை

கடவுள் இருக்கான் குமாரு ஷூட்டிங்ஸ்பாட்டில் நடிகைகள் ஆனந்திக்கும், நிக்கி கல்ராணிக்கும் இடையே சண்டை என்று செய்திகள் வெளியாகின.


ராஜேஷ்

ராஜேஷ்

ஒரு படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருந்தால் பிரச்சனை வரும் என்பார்கள். ஆனால் இந்த படத்தின் கதாபாத்திரங்கள் பற்றி ஆனந்தி, நிக்கி கல்ராணியிடம் முதலிலேயே விளக்கமாக கூறிவிட்டேன் என்கிறார் ராஜேஷ்.


இல்லை

இல்லை

அவரவர் கதாபாத்திரம் பற்றி நன்றாக புரிந்து கொண்டதால் ஆனந்திக்கும், நிக்கி கல்ராணிக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களுக்கு இடையே மோதல் என்று வெளியான தகவலில் உண்மை இல்லை என்று ராஜேஷ் தெரிவித்துள்ளார்.


கதை

கதை

கடவுள் இருக்கான் குமாரு ஒரு கலகலப்பான படம். ஆனந்தி, நிக்கி இருவருமே ஜி.வி. பிரகாஷை காதலிக்கிறார்கள். இதில் யார் ஜி.வி.யுடன் சேர்கிறார்கள் என்பது சஸ்பென்ஸ் என்று ராஜேஷ் கூறியுள்ளார்.


English summary
Kadavul Irukkan Kumaru director Rajesh said that all is well between his two leading ladies Anandhi and Nikki Galrani.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil