»   »  மேனேஜர் மூலம் வரலட்சுமியுடனான காதலை முறித்த விஷால்?

மேனேஜர் மூலம் வரலட்சுமியுடனான காதலை முறித்த விஷால்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு நபர் தனது 7 ஆண்டு கால காதலை மேனேஜர் மூலம் தூதுவிட்டு முறித்துள்ளார் என நடிகை வரலட்சுமி சரத்குமார் ட்வீட்டியிருப்பது விஷாலை பற்றியா என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

நடிகர் சங்க விவகாரம் தொடர்பாக விஷாலும், சரத்குமாரும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி தனது தந்தைக்கு ஆகாத விஷாலை காதலித்து வருகிறார்.

All is over between Varalakshmi and Vishal?

நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக வரலட்சுமிக்கும், விஷாலுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு காதல் முறிந்துவிட்டதாக அண்மையில் பேச்சு கிளம்பியது.

இந்நிலையில் வரலட்சுமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

காதல் முறிவுகள் தரம் தாழ்ந்துள்ளன..ஒரு ஆண் தனது மேனேஜர் மூலம் 7 ஆண்டு கால காதலை முறித்துள்ளார்...காதல் எங்கே? என தெரிவித்துள்ளார்.

வரலட்சுமி விஷாலை பற்றி தான் இப்படி ட்வீட் போட்டுள்ளாரோ என ஆளாளுக்கு விவாதிக்கத் துவங்கிவிட்டனர்.

English summary
Varalakshmi Sarathkumar has tweeted that, 'Breakups hv reached a new low.. a guy broke up a 7yr relationship thru his manager.. lol what's has the world come too..whr is the love..?!'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil