சமந்தாவுக்கும், அம்மாவுக்கும் இடையே பிரச்சனையா?: இதை பாருங்க தெரியும்
Recommended Video
சென்னை: சமந்தா தனது அம்மா பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நடிகை சமந்தாவுக்கும், அவரின் அம்மாவுக்கும் இடையே பிரச்சனை. அதனால் அவர்கள் சரியாக பேசிக் கொள்வது இல்லை என்று திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார் சமந்தா. தனது அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டு சமந்தா கூறியிருப்பதாவது,
என் அம்மா பிரார்த்தனையில் மேஜிக் உள்ளது என்று நான் நம்பினேன், நம்பிக் கொண்டிருக்கிறேன். நான் சிறுமியாக இருந்தபோது செய்தது போன்றே தற்போதும் என் அம்மாவிடம் சென்று எனக்காக பிரார்த்தனை செய்யச் சொல்வேன். அவர் பிரார்த்தனை செய்தால் எல்லாம் சரியாகிவிடும்.
இதில் சிறப்பு என்னவென்றால் என் அம்மா எப்பொழுதுமே தனக்காக பிரார்த்தனை செய்வது இல்லை. கடவுளுக்கு அடுத்து உள்ளவர் அம்மா. லவ் யூ அம்மா என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











