twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அட்டக்கத்தி தினேஷின் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - ஈரமுள்ள மனிதர்களின் கதை

    |

    சென்னை: லாரி டிரைவர்களின் அருகில் சென்று பார்த்தால் தான் அவர்களும் ஈரமான மனிதர்கள் என்று தெரியும் என்று இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை தெரிவித்தார். இந்தப்படத்தில் ஹீரோவாக அட்டக்கத்தி தினேஷ் நடிக்க இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிக்கிறார்.

    2012ஆம் ஆண்டு தினேஷ் கதாநாயகனாக நடித்த அட்டகத்தி மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பா. இரஞ்சித். 2014ல் மெட்ராஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பிரமாண்டமான கபாலி மற்றும் காலா திரைப்படத்தை திரைக்கதை எழுதி இயக்கியதின் மூலம் உலகளவில் அடையாளம் காணப்பட்டவர்.

    All Lorry Drivers are soft characters – Athiyan Athira

    2018ஆம் ஆண்டில் பா. இரஞ்சித்தின் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் சமூக அரசியல் சார்ந்து வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் தயாரித்த முதல் திரைப்படத்தை தொடர்ந்து அட்டகத்தி தினேஷ் நடிப்பில் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு எனும் திரைப்படத்தை தயாரிக்கிறார்.

    தினேஷ், ரித்விகா, ஆனந்தி, லிஜீஸ் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை பா. இரஞ்சித்தின் உதவியாளரான அதியன் ஆதிரை இயக்குகிறார். இது இவர் இயக்கும் முதல் திரைப்படமாகும். மகிழ்ச்சி, தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ், போன்ற ஆல்பங்களை இசையமைத்த தென்மா இத்திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

    காதலிப்பதாக ஏமாற்றிய கவினுக்கு ஸ்பெஷல் தண்டனை கொடுத்த கஸ்தூரி! என்னன்னு பாருங்க! காதலிப்பதாக ஏமாற்றிய கவினுக்கு ஸ்பெஷல் தண்டனை கொடுத்த கஸ்தூரி! என்னன்னு பாருங்க!

    கிஷோர் குமார் ஒளிப்பதிவாளரகவும், காலா, கபாலி போன்ற படங்களில் கலை இயக்குனராக பணிபுரிந்த த.இராமலிங்கம் இப்படத்திலும் கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கின்றனர். இது ஒரு லாரி டிரைவர் பற்றிய கதை என்பதும் இதில் பல்வேறு சமூக அவலங்களை பற்றி பேசும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    பஸ், கார் டிரைவர்களுக்கு இருக்கும் மரியாதை கூட லாரி டிரைவர்களுக்கு இருப்பதில்லை. அவர்களை இந்த சமூகம் அழுக்கானவர்களாகவும், குடிகாரர்களாகவும். ஒழுக்கமில்லாதவர்களாகவும் சித்தரித்துள்ளது. ஆனால் அவர்களின் வாழ்க்கையை அருகில் சென்று பார்த்தால் தான் அவர்களும் எவ்வளவு ஈரமான மனிதர்கள் என்பது தெரியும். அப்படிப்பட்ட ஒரு லாரி டிரைவரின் கதைதான் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, என்று இயக்குநர் கூறினார்.

    அறிமுகமான முதல் படத்திலேயே பல சவால்களை சந்தித்து சிறந்த முறையில் படத்தை இயக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் என்ற நற்பெயரை பெற்றுள்ளார் கிஷோர் குமார். 45 நாட்களில் 40 லொகேஷன்களில் ஷூட்டிங்கை முடித்தாக வேண்டும் என்ற சவாலை ஏற்று, இயக்குனருடன் பக்கபலமாக இணைந்து படத்தின் ஷூட்டிங்கை குறித்த நேரத்தில் முடித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார்.

    இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த இயக்குனர் அதியன் ஆதிரை, கிஷோர் குமாரை பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் 45 நாட்களில் 40 லொகேஷன் என்று திட்டமிடும் போதே மனதில் ஒரு அச்சம் ஏற்பட்டது. ஆனால் இந்த கடினமான பயணத்தை திட்டமிட்டபடி முடிப்பதற்கு கிஷோர் கடுமையாக உழைத்தார், என்று கூறினார்.

    பா. ரஞ்சித்தின் மெட்ராஸ், காலா, கபாலி போன்ற படங்களில் ஒளிப்பதிவாளரான முரளியின் மாணவர் தான் கிஷோர் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் திரையுலகில் ஒரு பெரும் எதிர்பார்பை உண்டாகியுள்ளது.

    English summary
    The director of the Irandam Ulaga Porin Kadaisi Gundu film of the Second World War, Athiyan Athirai, said that the lorry drivers would know that they are all soft character.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X