பொன்னியின் செல்வன் டீசரில் எனக்கு பிடிச்சது இது தான்...ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்த அந்த ஒரு விஷயம்

சென்னை : அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்த பொன்னியின் செல்வன் முக்கிய கேரக்டர்களின் போஸ்டர்கள், டீசர் ஆகியன தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதிலும் நேற்று வெளியிடப்பட்ட டீசர் பல விவாதங்களை துவக்கி வைத்துள்ளது.

1950 களில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அப்படியே சினிமாவாக இயக்க வேண்டும் என எம்ஜிஆர் துவங்கி பலரும் முயற்சி செய்து தோல்வி அடைந்தனர். பலருக்கும் கனவாக இருந்த பொன்னியின் செல்வன் கதையை சினிமாவாக இயக்கி, சாதித்து காட்டி உள்ளார் டைரக்டர் மணிரத்னம்.

தானே 1980 களில் துவங்கி 2 முறை முயற்சித்து தோல்வி அடைந்து, முன்றாவது முறையில் தான் சாதித்து காட்டியதாக மணிரத்னமே சொல்லி உள்ளார். அப்பேர் பட்ட வரலாற்று காவியம் சினிமாவாக செப்டம்பர் 30 ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

பொன்னியின் செல்வன் டீசர்

பொன்னியின் செல்வன் டீசர்

ஆதித்ய கரிகாலன் போஸ்டரை வெளியிட்ட போது, வந்தியத் தேவன் போஸ்டரை எங்கே என கேட்டார்கள். வந்தியத் தேவன் போஸ்டர் வெளியிட்டதும், ராஜராஜ சோழனை பார்க்க ஆர்வமாக இருப்பதாக சொன்னார்கள். ராஜ ராஜசோழன் போஸ்டர் வெளியிட்டதும் டீசரை பார்க்க ஆர்வமாக இருப்பதாக ரசிகர்கள் கூறினார்கள்.இந்நிலையில் நேற்று டீசரும் வெளியிடப்பட்டது.

ஆர்வத்தில் ரசிகர்கள்

ஆர்வத்தில் ரசிகர்கள்

டீசர் வெளியிட்டது தேதியை கடைசி நிமிடம் வரை காக்க வைத்து உறுதி செய்தது, ரஜினி போன்றவர்களை அழைத்து இன்னும் பிரம்மாண்டமாக நடத்தவில்லை என்பது போன்ற விஷயங்கள் குறையாக ரசிகர்களால் சொல்லப்பட்டாலும் டீசர் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்து விட்டது. படத்தை பார்க்கும் ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது.

இருவரில் யார் அழகு

இருவரில் யார் அழகு

போஸ்டரை வெளியிட்ட போது வந்தியத்தேவன், குந்தவை, ராஜ ராஜசோழனை கேட்டவர்கள் டீசரில் ஐஸ்வர்யா ராயை பார்த்து அத்தனை பேரும் அசந்து போய் உள்ளனர். ஐஸ்வர்யா ராயும், த்ரிஷாவும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சியில் இவர் முகம் பாதி, அவர் முகம் பாதி என காட்டப்பட்டிருப்பது, இருவரில் யார் அழகு என அனைவரையும் ஒரு நிமிட திகைத்து போக வைத்து விட்டது.

48 வயசில் என்ன அழகுப்பா

48 வயசில் என்ன அழகுப்பா

அதைவிட விக்ரம் வசனம் பேசும் போது, ஐஸ்வர்யா ராயின் க்ளிப்பிங்ஸ் காட்டப்படும். அந்த ஷாட்டை பார்த்து "யப்பா...என்ன அழகு" என சொக்காதவர்களே இருக்க முடியாது. பொன்னியின் செல்வன் டீசரை பார்த்த ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது இந்த ஒரு ஷாட் தானாம். 48 வயதில் இத்தனை அழகா என கண்கள் விரிய பாராட்டி வருகின்றனர். ஐஸ்வர்யா ராய் வரும் ஷாட்களை மட்டும் எடுத்து சிலர் வைரலாக்கி வருகின்றனர்.

டிரெண்டிங்கில் தெறிக்குதே

டிரெண்டிங்கில் தெறிக்குதே

ஐஸ்வர்யா ராயின் அழகை பார்ப்பதற்காகவே பலரும் பொன்னியின் செல்வன் டீசர் ரிப்பீட் மோடில் பார்த்து வருவதாக கூறி வருகின்றனர். இதனால் நேற்று முதல் #AishwaryaRaiBachchan என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. நந்தினி ரோலில் நடிக்கும் ஐஸ்வர்யா ராயின் போஸ்டரை பார்த்ததும் முதலில் ஜோதா அக்பர் பார்ட் 2 எடுத்திருக்காங்களா, வில்லி ரோல் ஐஸ்வர்யாவிற்கு செட் ஆகும் என பலரும் பலவிதங்களில் சந்தேகங்களை கிளப்பினர். இவரை பார்க்கவா காத்திருந்தோம், குந்தவை த்ரிஷாவின் போஸ்டரை வெளியிடும் படி கேட்டு ஐஸ்வர்யாவின் போஸ்டரை கலாய்த்தனர்.

எல்லோரையும் கவர்ந்துட்டாரே

எல்லோரையும் கவர்ந்துட்டாரே

ஆனால் டீசர் வெளியான பிறகு நிலைமை தலைகீழாக மாறி விட்டது. இப்போது டீசரின் பிரம்மாண்டம், போர்க்களம், சோழர்களின் வரலாறு போன்றவற்றை தாண்டி ஐஸ்வர்யா ராயின் அழகு அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது. இந்த அழகோடு வில்லத்தனம் கலந்தால் எப்படி இருக்கும் என கற்பனைக் குதிரைகளை கண்டபடி தட்டி விட்டு, பல விதங்களில் தங்களின் ஆச்சரியங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X