»   »  மே 16ம் தேதி சென்னையில் இருந்தால் ஓட்டுப் போடுவேன் - கமல்ஹாசன்

மே 16ம் தேதி சென்னையில் இருந்தால் ஓட்டுப் போடுவேன் - கமல்ஹாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 16ம் தேதி நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு அனைவரும் வாக்களிப்பதற்கு வசதியாக அன்றைய தினம் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தல்

சட்டமன்றத் தேர்தல்

வருகின்ற 16ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி அனைவரும் வாக்களிப்பதற்கு வசதியாக அன்றைய தினம் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 16 ம் தேதி நடிக, நடிகையர் வாக்களிபதற்கு வசதியாக அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

ரஜினி, கமல்

ரஜினி, கமல்

நடிகர் ரஜினிகாந்த் மே 16ம் தேதி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கினைப் பதிவு செய்யவுள்ளார். அதேநேரம் கமல் வெளிநாட்டுப் படப்பிடிப்பில் இருப்பதால் அன்றைய தினம் வாக்களிக்க மாட்டார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து கமல் திங்கட்கிழமை சென்னையில் இருந்தால் ஓட்டுப் போடுவேன் என்று கூறியிருக்கிறார்.

விஜய், அஜீத்

விஜய், அஜீத்

விஜய், அஜீத், விக்ரம், கார்த்தி, விஷால் என திரையுலகில் இருக்கும் மொத்த நடிக, நடிகையரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றத் தயாராகி வருகின்றனர். கார்த்தி காஷ்மீர் படபிடிப்புத் தளத்தில் இருந்தாலும் தனது வாக்கினைப் பதிவு செய்திட அவர் சென்னை வருகிறார்.

சூர்யா

சூர்யா

அதே நேரம் சூர்யா தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டில் இருப்பதால், அவர் தனது வாக்கினைப் பதிவு செய்திட வரமாட்டார் என்று கூறப்படுகிறது. கமலும் சூர்யா வரிசையில் இணைவாரா? என்பது தெரியவில்லை.

English summary
Producer Council Announced ''All Shooting Cancelled on May 16''.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil