»   »  தியேட்டர்களில் ஆட்டோக்களையும் அனுமதியுங்கள்!- விஷால் வேண்டுகோள்

தியேட்டர்களில் ஆட்டோக்களையும் அனுமதியுங்கள்!- விஷால் வேண்டுகோள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

படங்கள் முன்பு போல நன்றாக ஓட வேண்டுமென்றால் தியேட்டர்களில் ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் விஷால் கூறினார்.

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட் படத்தைத் தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தயாரித்துள்ள புதிய படம் கத்தி சண்டை. விஷால் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு நடிக்கிறார் மற்றும் சௌந்தர்ராஜன், மதன்பாப், தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், சின்னி ஜெயயந்த், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

Allow auto rickshaws inside the theaters, says Vishal

இந்த படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் விஷால் பேசுகையில், "முன்பெல்லாம் திரையரங்குகளில் அதிகமாக ஆடோக்காரர்கள்தான் முதல் காட்சி பார்ப்பார்கள். பார்த்துவிட்டு அவர்கள் தங்கள் நண்பர்களிடமும், தங்களது ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளிடமும் படம் நன்றாக இருக்கிறது. தியேட்டரில் போய் பாருங்கள் என்று சொல்வார்கள். அதைக் கேட்டு திரையரங்குகளுக்கு கூட்டமும் வரும் படமும் நன்றாக போகும். ஆனால் இப்போது ஆடோக்களை தியேட்டர்களில் அனுமதிப்பதில்லை.

ஆனால் எங்கள் 'கத்தி சண்டை' படம் மூலம் அதற்கு ஒரு விடிவுகாலம் பிறக்க உள்ளது. நான் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் இந்த படத்தை வெளியிடும் கேமியே பிலிம்ஸ் ஜெயகுமார், படத்தின் இயக்குநர் சுராஜ் ஆகியோர் அனைத்து திரையரங்க உரிமையாளர்களிடம் கத்திசண்டை படத்திற்கு ஆட்டோக்களை தியேட்டர்களுக்குள் அனுமதிக்குமாறு பேசி வருகிறோம். நிச்சயம் இது நடக்கும்," என்றார்.

English summary
Actor Vishal requested theater owners to allow auto rickshaws inside the theaters.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil