Don't Miss!
- Sports
தோனி போயிட்டாரு.. இனி நான் தான் பார்த்துக்கனும்.. ஹர்திக் பாண்டியா பேச்சு..தற்பெருமையா? நம்பிக்கையா?
- News
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக உணவகங்களில் பீப் பிரியாணி சேர்ப்பு! எஸ்சி, எஸ்டி ஆணையம் அதிரடி!
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Technology
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அல்லு அர்ஜுனுக்கு சிறந்த இந்தியன் விருது: அடுத்தடுத்து விருதுகளால் மாஸ் காட்டும் புஷ்பா ஹீரோ!
டெல்லி: தெலுங்கில் கடந்தாண்டு டிசம்பரில் வெளியான 'புஷ்பா' திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
புஷ்பா படத்தில் ஹீரோவாக நடித்த அல்லு அர்ஜுனுக்கு ஏராளமான விருதுகள் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில், தற்போது அல்லு அர்ஜுனுக்கு மேலும் ஒரு சிறப்பான விருது கிடைத்துள்ளது.
காட்ஃபாதர் பாக்ஸ் ஆபிஸ்: புஷ்பா, RRR படங்கள் வரிசையில் 100 கோடி… மாஸ் காட்டிய சிரஞ்சீவி!

சிக்ஸர் அடித்த புஷ்பா
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்தாண்டு டிசம்பரில் வெளியான 'புஷ்பா: தி ரைஸ்' திரைப்படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். செம்மரக் கடத்தலை பின்னனியாகக் கொண்டு கமர்சியலாக உருவான புஷ்பா படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. மேலும், பாக்ஸ் ஆபிஸிலும் 500 கோடிக்கும் மேல் வசூலித்தது.

இரண்டாம் பாகம்
புஷ்பா படம் தொடங்கப்படும் போதே, இது இரண்டு பாகங்களாக வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி முதல் பாகம் 2021ல் வெளியாகி வெற்றிப் பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகமும் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் நடிக்கும் இரண்டாம் பாகத்துக்கு இப்போதே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இரண்டாம் பாகத்தின் ஆரம்பக்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், அல்லு அர்ஜுன் விரைவில் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.

விருதுக்கு மேல் விருதுகள்
இதனிடையே புஷ்பா படத்தின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அடுத்தடுத்து விருதுகள் கிடைத்து வருகின்றன. சைமா விருது விழா, ஃபிலிம்பேர் விருது விழாக்களில் புஷ்பா படத்திற்கு பல பிரிவுகளில் விருதுகள் கிடைத்தன. அதேபோல், அல்லு அர்ஜுனும் சிறந்த நடிகருக்கான விருதுகளை வென்று அசத்தி வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற வருடாந்திர அணிவகுப்பில் இந்தியாவின் கிராண்ட் மார்ஷல் என்று புஷ்பா படத்துக்கு பாராட்டு கிடைத்தது.

சிறந்த இந்தியன் விருது
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு பொழுதுப்போக்கு பிரிவில் '2022ம் ஆண்டின் சிறந்த இந்தியன்' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த விருதை அல்லு அர்ஜுனுக்கு வழங்கினார். தனியார் செய்திச் சேனல் சார்பில் வழங்கப்பட்ட இந்த விருது, அல்லு அர்ஜுனுக்கு மேலும் கெளரவத்தை கொடுத்துள்ளது. இதுகுறித்து தனது மகிழ்ச்சியை டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார் அல்லு அர்ஜுன். மேலும், விருது வழங்கிய தனியார் ஊடகம், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதனையடுத்து விருது வென்ற அல்லு அர்ஜுனுக்கு பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.