ரிலீசுக்கு முன்பே புஷ்பா டீமுக்கு தங்க மோதிரம் பரிசளித்த அல்லு அர்ஜுன்...எதற்கு தெரியுமா ?
ஐதராபாத் : தெலுங்கில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று புஷ்பா. டைரக்டர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள படம். இந்த படத்தின் ஷுட்டிங் முடிக்கப்பட்டு, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.
புஷ்பா படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். சுனில், அனுஷ்யா பரத்வாஜ், ஃபகத் ஃபாசில், கன்னட நடிகர் தனஞ்செயன் உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள புஷ்பா படத்தின் முதல் பாகம் தான் டிசம்பர் 17 ல் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இரண்டாம் பாகம் 2023 அல்லது அதற்கு பிறகு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.

இது தான் கதையா
சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்துபவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது தான் புஷ்பா படம். இந்த படத்தை டிசம்பர் 17 ம் தேதி மிக பிரம்மாண்டமாக தியேட்டரில் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

அயிட்டம் சாங்கில் சமந்தா
புஷ்பா படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டுள்ளார் சமந்தா. இந்த அயிட்டம் சாங்கில் அல்லு அர்ஜுனுடன் ஆடுவதற்கு அவருக்கு ரூ.1.5 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டதாம். நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த பிறகு சமந்தா நடித்துள்ள முதல் பாடல் இது. அதுவும் டாப் ஹீரோயினான சமந்தா அயிட்டம் சாங்கிற்கு ஆடுவது இதுவே முதல் முறையாகும்.

தங்க மோதிரம் பரிசு
இந்த பாடல் காட்சி ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது. சமந்தாவும், தானும் நடனம் ஆடிய ஸ்பெஷல் பாடல் காட்சியின் ஷுட்டிங் முடிந்த அடுத்த நாளே அந்த செட்டில் இருந்த 12 பேருக்கும் ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கிஃப்ட்டாக 10 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் கொடுத்தாராம் அல்லு அர்ஜுன்.

இதுக்கு தான் பரிசா
சொன்ன நேரத்திற்கு முன்பாகவே இந்த பாடலின் ஷுட்டிங்கை முடித்து கொடுத்ததை பாராட்டி தான் டைரக்டர் சுகுமார் உள்ளிட்ட படக்குழுவிற்கு இந்த பரிசை அல்லு அர்ஜுன் கொடுத்தாராம். வெறும் 12 பேரை வைத்து மிக குறுகிய காலத்தில் இந்த பாடலை படமாக்கி முடித்ததில் அல்லு அர்ஜுன் ஆச்சரியப்பட்டு, பாராட்டினாராம். அவர்களை கெளரவப்படுத்த தான் இந்த பரிசாம்.


Click it and Unblock the Notifications











