அபராதம் விதித்த போலீசார்...சட்ட சிக்கலில் சிக்கிய அல்லு அர்ஜுன்...அப்படி என்ன செய்தார்?

ஐதராபாத் : தெலுங்கு மாஸ் ஹீரோவான அல்லு அர்ஜுனுக்கு அபராதம் விதித்தும், அவர் மீது வழக்கு தொடர்ந்தும் ஐதராபாத் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது டோலிவுட்டையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அல்லு அர்ஜுன் மட்டுமல்ல தெலுங்கு திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் மீதும் ஒரே சமயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது ஏன் இந்த அதிரடி என அனைவரும் பதற்றத்துடன் கேட்டு வருகின்றனர்.

விரைவில் புஷ்பா: தி ரூல்

விரைவில் புஷ்பா: தி ரூல்

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா தி ரைஸ் படம் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீசாகி வசூலை அள்ளி குவித்தது. இந்த படம் செம ஹிட்டானதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா: தி ரூல் என்ற பெயரில் எடுக்கப்பட உள்ளது. சுகுமாறன் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, தனஞ்ஜயா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர். விரைவில் இந்த படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளது.

பல படங்களில் பிஸி

பல படங்களில் பிஸி

தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்து மாஸ் ஹிட்டான ஆல வைகுண்டபுரமுலோ படத்தின் இந்தி ரீமேக்கும் விரைவில் ரிலீசாக உள்ளது. அதோடு கொரடலா சிவா இயக்கும் பெயரிடப்படாத மற்றொரு படத்திலும் அல்லு அர்ஜுன் நடிக்க கமிட்டாகி உள்ளார். புஷ்பா 2 படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

அல்லு அர்ஜுன் மீது வழக்கு

அல்லு அர்ஜுன் மீது வழக்கு

இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக அல்லு அர்ஜுன் மீது ஐதராபாத்து போக்குவரத்து போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர் தனது காரில் கலர்ஃபிலிம் ஒட்டியிருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மார்க்கெட் பகுதியில் அவரின் காரை தடுத்து நிறுத்திய போலீசார், கார் கண்ணாடியில் நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளனர்.

என்ன செய்தார் அல்லு அர்ஜுன்

என்ன செய்தார் அல்லு அர்ஜுன்

Range Rover காரில் கலர்ஃபிலிம் ஒட்டியதற்காக அல்லு அர்ஜுனுக்கு ரூ.700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கார் கண்ணாடிகளில் கருப்பு நிற ஃபிலிம் ஒட்டுவதற்கு 2012 ம் ஆண்டு முதல் இந்தியாவில் தடை உள்ளது. வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள கருப்பு நிற ஃபிலிம்களை நீக்கும்படி போலீசார் பலமுறை அறிவுறுத்தி வருகின்றனர். இந்த விதியை மீறியதற்காக தான் அல்லு அர்ஜுன் மீது வழக்கு தொடர்ந்து, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இவங்க மேலேயும் வழக்கா

இவங்க மேலேயும் வழக்கா

அல்லு அர்ஜுன் மட்டுமல்ல இதே போல் போக்குவரத்து விதிகளை மீறியதாக தெலுங்கு டைரக்டர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ், கல்யாண் ராம், ஜுனியர் என்டிஆர், மஞ்சு மனோஜ் உள்ளிட்டோர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதே காரணத்திற்காக இவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X