அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்..அமெரிக்காவில் இந்திய தேசிய கொடியுடன் வலம்!

நியூயார்க் : நியூயார்க் நடந்த இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் நடிகர் அல்லு அர்ஜூன் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி வலம் வந்தார்.

நடிகர் அல்லு அர்ஜுன் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பால் தெலுங்குத் திரையுலகில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

இவரது அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. இதனால் இவர் எவர்கிரீன் சூப்பர் ஹிட் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஆர்யா 2, S/O சத்தியமூர்த்தி மற்றும் ருத்ரமாதேவி, சர்ரைனோடு ஆர்யா 2, சங்கர் தாதா ஜிந்தாபாத், வருடு, வேதம், ரேஸ் குர்ராம்,, DJ: துவ்வாடா ஜகன்னாதம் மற்றும் அல வைகுந்தபுரமுலு போன்ற பல படங்கள் வெற்றி பெற்றன. அல வைகுந்தபுரமுலு இடம் பெற்ற புட்டபொம்மா புட்டபொம்மா பாடல் அனைவரையும் ஆட்டம்போடவைத்தது.

சூப்பர் டூப்பர் படங்கள்

சூப்பர் டூப்பர் படங்கள்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரிலீசான புஷ்பா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளன அந்த படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பு, பேச்சு, பாடி லாங்வேஜ் என அனைத்தும் மாஸாக இருந்ததால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. மேலும், பாக்ஸ் ஆபிசில் உலகம் முழுவதும் ₹300 கோடி வசூலை வாரிக்கவித்தது. இன்று புஸ்பா 2 திரைப்படத்திற்கு பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது.

தேசிய கொடியை கையில் ஏந்தி

தேசிய கொடியை கையில் ஏந்தி

இந்நிலையில், நியூயார்க்கில் ஆண்டுதோறும் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கிராண்ட் மார்ஷலாக நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த அல்லு அர்ஜுனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற பேரணியில் அல்லு அர்ஜூன் தேசிய கொடியை கையில் ஏந்திய படி திறந்த ஜூப்பில் வலம் வந்தார்.

கிராண்ட் மார்ஷல் பட்டம்

கிராண்ட் மார்ஷல் பட்டம்

இந்த அணிவகுப்பில் அல்லுவுடன் அவரது மனைவி சினேகா ரெட்டி கலந்து கொண்டார். இந்த விழாவில், அல்லு அர்ஜூன் கிராண்ட் மார்ஷல் பட்டத்துடன் கௌரவிக்கப்பட்டார். இந்த வீடியோவை நடிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து "நியூயார்க்கில் நடந்த இந்திய தின அணிவகுப்பில் கிராண்ட் மார்ஷல் ஆனது ஒரு மரியாதை" என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X