புஷ்பா 2 தயாரிப்பாளருக்கு திடீர் கண்டிஷன் போட்ட அல்லு அர்ஜுன்.. அதுக்கு ஓகே சொன்னா தான் நடிப்பாராம்?
சென்னை: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் மற்றும் சமந்தா நடித்த புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது.
டோலிவுட்டில் மட்டுமின்றி பாலிவுட் பெல்ட்டிலும் புஷ்பா படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், புஷ்பா 2 படத்திற்காக தயாரிப்பாளரிடம் அப்படியொரு கண்டிஷனை அல்லு அர்ஜுன் போட்டுள்ளதாக கூறுகின்றனர்.
அதற்கு தயாரிப்பாளர் ஓகே சொன்னால் தான் அல்லு அர்ஜுன் ஷூட்டிங்கிற்கே வருவேன் என்று ஒரேயடியாக கூறிவிட்டாராம்.

சமந்தா சந்தேகம்
அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே சமந்தாவின் அந்த ஓ சொல்றியா மாமா பாடல் தான். ஆனால், தற்போது இருக்கும் நிலையில், சமந்தா புஷ்பா 2 படத்தில் குத்தாட்டம் போடுவது என்பது ரொம்பவே சந்தேகம் என்கின்றனர். சமந்தாவுக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் அல்லது பாலிவுட் ஹீரோயின்கள் உள்ளிட்ட டாப் நடிகைகளுடன் புஷ்பா 2 பாடலுக்கான பேச்சுவார்த்தைகள் செல்வதாக கூறுகின்றனர்.

புஷ்பா 2
புஷ்பா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து புஷ்பா 2 படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக ஆரம்பமாகி உள்ளன. நடிகர் அல்லு அர்ஜுனின் புதிய கெட்டப் போட்டோக்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகின. அடுத்த ஆண்டு இறுதிக்குள் புஷ்பா 2 திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்சேதுபதி இல்லை
புஷ்பா 2 படத்தில் பகத் ஃபாசில் மட்டுமின்றி விஜய்சேதுபதியும் வில்லனாக வருவார் என தகவல்கள் பரவின. ஆனால், விஜய்சேதுபதி தரப்பு அதை முழுவதுமாக மறுத்து விட்டது. ஃபேமிலி மேன் புகழ் மனோஜ் பாஜ்பாய் இந்தி ரசிகர்களை கவரும் விதமாக புஷ்பா 2வில் இடம்பெற உள்ளார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

தயாரிப்பாளருக்கு கண்டிஷன்
டோலிவுட் படங்கள், கன்னட படங்கள் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸை தாண்டி செல்லும் நிலையில், புஷ்பா 2 திரைப்படமும் 1000 கோடி வசூல் டார்கெட்டை வைத்தே பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாகவும், இதற்காக இயக்குநர் எத்தனை கோடிகள் கேட்டாலும் கொடுக்க வேண்டும் என்றும், படப்பிடிப்பு துவங்கும் போதே இவ்வளவு கோடி தான் தருவேன் என பட்ஜெட்டை ஃபைனல் செய்யக் கூடாது என்றும் இந்த கண்டிஷனுக்கு ஓகே என்றால் தான் படப்பிடிப்பே துவங்கும் என இயக்குநருக்காக அல்லு அர்ஜுன் பேசியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெருசா யோசிங்க
புஷ்பா படத்தின் முதல் பாகம் முழுக்கவே செம்மரக் கடத்தலை வைத்தே படம் ஓடிய நிலையில், இரண்டாம் பாகத்தின் கதையில் ஏகப்பட்ட புதிய விஷயங்களை சேர்க்க சொல்லி அல்லு அர்ஜுன் இயக்குநரிடத்திலும் கூறியிருப்பதாகவும் காட்சிகளை பிரம்மாண்டமாக எடுங்க, இன்னமும் பெருசா யோசிங்க நம்ம படம் பெரிய பிசினஸ் பண்ணும் என ரொம்பவே உறுதியாக இருக்கிறாராம் அல்லு அர்ஜுன்.


Click it and Unblock the Notifications











