Don't Miss!
- News
"தமிழகத்தில் களமிறங்கும் பிரதமர் மோடி?" எங்கு தெரியுமா! ஓபனாக பேசிய அண்ணாமலை! அதிமுக குறித்தும் பரபர
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ராஜமெளலி படம் அளவுக்கு எகிறிய புஷ்பா 2 பட்ஜெட்.. விஜய்சேதுபதியின் அதிரடி என்ட்ரி தான் காரணமா?
ஹைதராபாத்: அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தின் பட்ஜெட் அதிகமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புஷ்பா படத்தின் முதல் பாகத்திலேயே நடிகர் விஜய்சேதுபதியை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன.
ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை. அவருக்கு பதில் தான் மலையாள நடிகர் பகத் ஃபாசில் மொட்டை கெட்டப்பில் வந்து மிரட்டினார்.
KGF, புஷ்பா, RRR பத்தி பேசுறப்ப, ஏன் அந்த தமிழ்ப் படத்த பத்தி பேசல..? நடிகர் கிஷோரின் ஆதங்கம்

பிளாக்பஸ்டர் புஷ்பா
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. செம்மரக் கடத்தலை பின்னணியில் கொண்டு நடந்த மாஃபியா கேங் வாரின் கதையாக புஷ்பா தி ரைஸ் திரைப்படம் இருந்தது. அதன் இரண்டாம் பாகம் புஷ்பா தி ரூல் ஆக உருவாகி வருகிறது.

புஷ்பா 2வில் விஜய்சேதுபதி
புஷ்பா படத்திலேயே வில்லனாக விஜய்சேதுபதியை தான் தேர்வு செய்து இருந்தார் இயக்குநர். ஆனால், ஏகப்பட்ட படப்பிடிப்பு காரணமாக அதை விஜய்சேதுபதி தவிர்த்து விட்டார். ஆனால், விடாப்பிடியாக இரண்டாம் பாகத்தில் இன்னொரு மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்திற்கு விஜய்சேதுபதியை கொண்டு வந்திருக்கிறார். இந்த முறை மறுப்பு தெரிவிக்க முடியாத நிலையில், சம்மதம் தெரிவித்துள்ளார் விஜய்சேதுபதி.

அதிக சம்பளம்
நடிகர் விஜய்சேதுபதிக்கு புஷ்பா 2 படத்தில் வில்லனாக நடிக்க பெரும் தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியில் ஒரு வெப்சீரிஸ்க்கு நடிக்கவே 35 கோடி வரை விஜய்சேதுபதிக்கு சம்பளம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புஷ்பா படத்தில் வில்லனாக நடிக்க 15 முதல் 20 கோடி வரை சம்பளம் தர ரெடியாக இருந்த நிலையில், தான் அவர் ஓகே சொன்னதாகவும் தகவல்கள் வலம் வருகின்றன.

ராஜமெளலி பட ரேஞ்சுக்கு பட்ஜெட்
புஷ்பா 2 படத்தின் பட்ஜெட் இயக்குநர் ராஜமெளலி பட ரேஞ்சுக்கு தற்போது 350 கோடியாக அதிகரித்துள்ளது என அட்டகாசமான ஹாட் அப்டேட்கள் கசிந்துள்ளன. கேஜிஎஃப் 2 படத்தின் 2ம் பாகம் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில், புஷ்பா படத்தின் முதல் பாகம் வசூல் செய்த 350 கோடியை மொத்தமாக கொட்டி 1000 கோடி வசூலை அள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் முழு மூச்சில் செயல்பட்டு வருவதாக கூறுகின்றனர்.

ராஷ்மிகா கழுத்தை அறுக்கப் போறாரா
விக்ரம் படத்தில் காயத்ரியின் கழுத்தை அறுத்த விஜய்சேதுபதி, புஷ்பா 2 படத்தில் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவின் கழுத்தை அறுக்க போறாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. புஷ்பா தி ரைஸ் படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் சாகடிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியான நிலையில், அந்த சம்பவத்தை விஜய்சேதுபதி தான் ரண கொடூரமாக செய்யப் போகிறரா என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற விட்டு வருகின்றனர்.