யம்மாடி...5 பில்லியன் பார்வைகளா...அசத்தல் சாதனை படைத்த புஷ்பா

சென்னை : டைரக்டர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த படம் புஷ்பா தி ரைஸ். இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீசாகி, பல வசூல் சாதனைகளை முறியடித்தது.

தெலுங்கில் எடுக்கப்பட்டு, 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்யப்பட்ட புஷ்பா படம், ஆந்திர மாநிலம் ஷேசாச்சலம் வனப்பகுதியில் நடக்கும் செம்மர கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படம் இந்தியிலும் 100 கோடி வசூல் செய்த படம் புஷ்பா.

அல்லு அர்ஜுன் டைட்டில் ரோலாக புஷ்பா ரோலிலும், ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளி ரோலிலும் நடித்திருந்தனர். ஊ சொல்றியா மாமா பாட்டிற்கு சமந்தா அயிட்டம் சாங்கிற்கு ஆடி இருந்தார்.

அதிகமானவர்களை கவர்ந்த பாடல்

அதிகமானவர்களை கவர்ந்த பாடல்

கொரோனாவிற்கு பிறகு இந்திய அளவில் முதல் முதலாக வசூல் சாதனை படைத்த படம் புஷ்பா தான். இந்த படம் உலகம் முழுவதும் 350 கோடிக்கும் அதிகமான தொகையை வசூல் செய்தது. இதே போல் சமந்தா நடனமாடிய ஊ சொல்றியா மாமா பாடல் தான் கடந்த ஆண்டில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட பாடலாக இருந்தது.

புஷ்பா படைத்த புதிய சாதனை

புஷ்பா படைத்த புதிய சாதனை

இந்நிலையில் புஷ்பா படம் இந்திய அளவில் மற்றொரு புதிய சாதனை படைத்துள்ளது. புஷ்பா படத்தின் ஆல்பம் இந்திய அளவில் 5 பில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் வரும் அனைத்து பாடல்களும் செம ஹிட் ஆகின .இதுவரை எந்த இந்திய சினிமாவும் படைக்காத சாதனையை புஷ்பா படம் செய்துள்ளது.

சமந்தா தான் இதற்கு காரணமா

சமந்தா தான் இதற்கு காரணமா

புஷ்பா படத்தில் ஊ சொல்றியா பாடலுக்கு பிறகு அதிகமானவர்கள் ரசித்து பார்த்த பாடலாக சாமி சாமி பாடல் உள்ளது. புஷ்பா படம் பெற்றுள்ள இந்த சாதனையால் புஷ்பா 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்காக அதிகரித்துள்ளது.சாதாரண மரம் வெட்டும் தொழிலாளி எப்படி செம்மர கடத்தல் டானாக மாறுகிறான் என்பது தான் புஷ்பா படத்தின் கதை. புஷ்பா எப்படி சர்வதேச மான்ஸ்டராக வளர்க்கிறார் என்பது தான் புஷ்பா 2 படத்தின் கதை.

அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த பெருமை

அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த பெருமை

புஷ்பா படத்தின் இந்த சாதனையை இந்தியா டுடே நாளிதழ் தனது அட்டை படத்தில் குறிப்பிட்டுள்ளது. அல்லு அர்ஜுனின் போட்டோவுடன் கவர் ஸ்டோரி வெளியிடப்பட்டுள்ளது மிகப் பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது.

விரைவில் புஷ்பா 2 ஷுட்டிங்

விரைவில் புஷ்பா 2 ஷுட்டிங்

புஷ்பா படம் பெற்ற பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து புஷ்பா 2 படத்தை இயக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் ஃபகத் ஃபாசில் நடிக்கவில்லை என்றும், அவர் நடித்த வனத்துறை அதிகாரி மற்றும் வில்லன் ரோலில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் புஷ்பா 2 படத்தின் ஷுட்டிங் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X