»   »  தப்புத் தப்பா பேசினாலும் தமிழில்தான் பேசுவேன்!- அல்லு அர்ஜூனின் 'தமிழ்ப் பாசம்'

தப்புத் தப்பா பேசினாலும் தமிழில்தான் பேசுவேன்!- அல்லு அர்ஜூனின் 'தமிழ்ப் பாசம்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாக்காரர்களின் மொழிப் பாசம் எல்லாருக்குமே புரிந்த ஒன்று. போகும் ஊருக்கேற்ப, ஊரின் மொழிக்கேற்ப விசுவாசம் காட்டுவார்கள்.

அல்லு அர்ஜுனும் இதற்கு விலக்கல்ல. இன்று சென்னைக்கு வந்திருந்த அல்லு, லிங்குசாமி இயக்கத்தில் தான் நடிக்கும் முதல் தமிழ்ப் படத் துவக்க விழாவில் பங்கேற்றார்.

Allu Arjun's Tamil spirit!

விழாவில் நடிகர் அல்லு அர்ஜுன் பேசுகையில், "நான் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் சென்னையில்தான் , 20 ஆண்டுகளாக இங்கேதான் இருந்தேன். எனக்கு சொந்த ஊர் சென்னைதான்.

நான் மேடைக்கு வந்து தமிழில் தான் பேசவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். தப்புத் தப்பாகப் பேசினாலும் தமிழில்தான் பேசுவேன்.

நான் தெலுங்கில் நடித்த எந்த ஒரு படத்தையும் தமிழில் டப் செய்து ரீலீஸ் செய்யவில்லை. அதற்க்கு காரணம் நான் பிறந்து வளர்ந்த சொந்த மண்ணில் நேரடி தமிழ் படம் நடிக்க வேண்டும் என்ற எண்ணம்தான். எந்த மண்ணில் ஜெயித்தாலும் என்னுடைய சொந்த மண்ணில் ஜெயித்தது போல் வராது. நான் இதற்காக பல நாட்களாக காத்திருந்தேன்," என்றார்.

அப்டிப் போடு... ஆக இருக்கிற ஹீரோக்களுக்கு செம டஃப்தான் போல!

English summary
Allu Arjun, the leading Telugu hero launching his career in Tamil through Lingusamy directorial.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil