»   »  அல்லு அர்ஜுனோட 2 வயசுப் பையன் செஞ்ச வேலையைப் பாருங்க

அல்லு அர்ஜுனோட 2 வயசுப் பையன் செஞ்ச வேலையைப் பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுனின் 2 வயது மகன் அயன், தன்னுடைய அப்பாவின் ட்விட்டர் பக்கத்தில், ஒரு பாடலை போஸ்ட் செய்து அனைவருக்கும் ஆச்சரியத்தை பரிசளித்திருக்கிறான்.

அல்லு அர்ஜுன்- சினேகா ரெட்டி தம்பதிகளின் மகன் அயனுக்கு 2 வயதாகிறது. ஆனால் இவன் செய்த ஒரு விஷயத்தால் தம்பதிகள் இருவரும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர்.

Allu Arjun Son Ayaan Post Sardar Gabbar Singh Song

அயன் தன்னுடைய அப்பாவின் மொபைலில் சர்தார் கப்பர் சிங் பாடலை ஐடியூனில் கேட்டு, அதனை அவரின் ட்விட்டர் பக்கத்திலும் போஸ்ட் செய்திருக்கிறான்.

Allu Arjun Son Ayaan Post Sardar Gabbar Singh Song

திடீரென்று தன்னுடைய ட்விட்டரைப் பார்த்த அல்லு அர்ஜுன் " என்னுடைய மகன் ஐடியூனில் பாட்டு கேட்டு அதனை என்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் ஷேர் செய்திருக்கிறான்.

இதற்கு அவன் 10 நிமிடங்களுக்கு மேல் வேலை செய்திருக்க வேண்டும். ஆனால் இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. இனிமேல் நான் கவனமாக இருக்க வேண்டும்.

அயனின் இந்த செயல் எனக்கு மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. நல்லவேளை அவன் பவன் கல்யாணின் சர்தார் கப்பர் சிங் பாடலை போஸ்ட் செய்திருக்கிறான்.

வேறு யாருடைய பாட்டையாவது போஸ்ட் செய்திருந்தால்? என்று கூறியிருக்கிறார்.

2 வயசுப் பையனா இருந்தாலும் 'குடும்பப் பாட்டை' கரெக்டா போஸ்ட் செஞ்சிருக்கான்...

English summary
Allu Arjun-Sneha Reddy Son Ayaan Posting a song From Sardar Gabbar Singh on Allu Arjun Twitter account.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil