விஜய் சேதுபதி ரோலில் நடிக்கும் அல்லு அர்ஜுன்.. வெளியானது மாஸான அப்டேட்!

சென்னை : நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடைசியாக வெளியான அலா வைகுண்டபுரம்லோ அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்தது.

இப்பொழுது ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமார் உடன் இணைந்து புஷ்பா படத்தில் முரட்டுத்தனமான டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழில் விஜய் சேதுபதி நடித்த சூப்பர் ஹிட் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அல்லு அர்ஜுன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

டப்பிங் ரீமேக்

டப்பிங் ரீமேக்

ஒரு மொழியில் வெளிவந்து ஹிட் ஆன படங்களை வேறு மொழிக்கு டப்பிங் செய்தும் ,ரீமேக் செய்தும் வெளியிடுவது வழக்கமான ஒன்று தான்.இவ்வாறு செய்வதனால் ஒரு மொழியில் இருக்கும் நடிகர்களுக்கு மற்ற மொழியிலும் ரசிகர்கள் கூடுகின்றனர் .அவ்வாறு ரீமேக் மற்றும் டப்பிங் செய்த பல படங்கள் மெகா ஹிட் ஆனதும் உண்டு.இதனை ட்ரெண்டாகவே பல இயக்குனர்கள் செய்து வருகின்றனர்.

வசூல் சாதனை படைத்த

வசூல் சாதனை படைத்த

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தமிழிலும் எக்கச்சக்கமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி ஹிட் அடித்துள்ளது. அந்த வகையில் கடைசியாக வெளியான அலா வைகுண்டபுரம்லோ 2020 இல் வெளியாகி அந்த ஆண்டின் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படமாக மாஸ் காட்டியது. அதிலும் அலா வைகுண்டபுரம்லோ படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவி வைரல் ஆனது.

முரட்டுத்தனமான டிரைவராக

முரட்டுத்தனமான டிரைவராக

அடுத்ததாக ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுவரை ஸ்டைலிஷ் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருந்த அல்லு அர்ஜுன் இந்த படத்தில் முரட்டுத்தனமான லாரி டிரைவராக நடித்துள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பெருமளவில் உள்ளது. அல்லு அர்ஜுனுக்கு இந்தியா முழுவதும் பல மொழிகளில் ரசிகர்கள் இருப்பதால் புஷ்பா படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பகத் பாசில் வில்லனாக நடித்துள்ளார்.

ஓ மை கடவுளே

ஓ மை கடவுளே

பாகுபலி இரண்டு பாகங்களாக வெளியாகி பட்டையக் கிளப்பியது போலவே இப்போது புஷ்பா திரைப்படமும் இரண்டு பாகங்களாக வெளியாகிறது. முதல் பாகம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2020இல் காதலர் தினத்தையொட்டி தமிழில் வெளியான " ஓ மை கடவுளே" எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. சிறு வயதிலிருந்தே நண்பர்களாக பழகும் ஒரு ஆண் மற்றும் பெண் ஒரு கட்டத்தில் தங்களுக்குள் இருக்கும் காதலை உணர்ந்து எப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்பதை சுவாரசியமாகவும் தற்போதுள்ள தலைமுறையினருக்கு ஏற்றபடியும் இந்த படம் வெளியாகியது அனைவருக்கும் பிடித்ததற்கு மிகப்பெரிய காரணம். அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் லீட் ரோலில் நடித்திருந்தனர்.

அல்லு அர்ஜுன் டச்

அல்லு அர்ஜுன் டச்

அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் நல்ல திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து ,அதற்காக அதிகமாக மெனக்கெடும் ஒரு திறமையான நடிகர் .தமிழ் சினிமாவை மிகவும் உன்னிப்பாக நீண்ட காலம் அப்டேட் செய்துவரும் ஒரு முக்கிய நடிகர் அல்லு அர்ஜுன். வியாபாரரீதியாக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த ஹிட் படங்களை தெலுங்கில் ரீமேக் செய்து அல்லது டப்பிங் உரிமைகளை வாங்கி தெலுங்கு ரசிகர்களுக்காக பிரத்யேகமாக வெளியிடுவது என்று பரபரப்பாக இயங்குபவர்.எந்த படம் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கலாம் ,எந்த நேரத்தில் படத்தை வெளியோடலாம் OTT ப்ரோமோஷன் எப்படி செய்யலாம் என்று வியாபார யுக்திகளை நன்கு புரிந்த ஒரு கதாநாயகன் அல்லு அர்ஜுன்.அப்படிப்பட்ட திறமைசாலி ஒரு சிறப்பு தோற்றம் அளிப்பது இந்த படத்தின் ஒட்டு மொத்த குழுவுக்குமே சந்தோஷமான செய்தியாகும் .

விஜய் சேதுபதி ரோலில் அல்லு அர்ஜுன்

விஜய் சேதுபதி ரோலில் அல்லு அர்ஜுன்

காதல் படமாக மட்டுமல்லாமல் சுவாரசியமான ஃபேண்டசி காட்சிகளும் இதில் இடம்பெற்று இருந்தன. அதில் விஜய் சேதுபதி மற்றும் ரமேஷ் கடவுளாக ஃபேண்டசி ரோலில் நடித்து அசத்தி இருந்தார்கள் . இப்படத்தை அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற "ஓ மை கடவுளே" இப்பொழுது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது. ஏற்கனவே படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இந்தப் படத்தையும் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். விஷ்வக் மற்றும் மிதிலா பல்கர் லீட் ரோலில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி தமிழில் விஜய் சேதுபதி நடித்திருந்த ஃபேண்டசி கடவுள் பாத்திரத்தில் தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.வணிகரீதியாக ஓ மை கடவுளே தயாரிப்பாளருக்கும் ,விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் ,தமிழ் நாட்டில் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது .அதே போல் தெலுங்கு சினிமாவிலும் ரீமேக் செய்யப்படும் இப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என்று நம்புவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X