»   »  அஜீத்துக்காக 'ஆப்பு' ரெடி பண்ணிய பிரேமம் இயக்குனர்

அஜீத்துக்காக 'ஆப்பு' ரெடி பண்ணிய பிரேமம் இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் அஜீத்துக்காக ஆப்பு என்ற படக்கதையை தயார் செய்து வைத்ததாக தெரிவித்துள்ளார்.

நிவின் பாலி, நஸ்ரியா நஸீம் நடித்த நேரம் படம் மூலம் இயக்குனர் ஆனவர் கேரளாவை சேர்ந்த அல்போன்ஸ் புத்ரன். அதன் பிறகு அவர் எடுத்த பிரேமம் படம் சூப்பர் ஹிட்டானது.


பிரேமம் மலையாள படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பிரேமம் மூலம் நடிகை சாய் பல்லவி பிரபலமானார்.


அல்போன்ஸ் புத்ரன்

அல்போன்ஸ் புத்ரன்

அல்போன்ஸ் புத்ரனுக்கு அஜீத் என்றால் பிடிக்கும். விவேகம் டீஸரில் அஜீத் பேசிய வசனத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் அஜீத் பற்றி அல்போன்ஸிடம் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
அஜீத்

அஜீத்

ஒன்பது, 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.ஏ.இ. கல்லூரியில் படித்தபோது நானும் என் நண்பர் ஐபி கார்த்திகேயனும் அஜீத்தை பார்க்க அவர் வீட்டுக்கு சென்றோம்.


வீடு

வீடு

அஜீத் வீட்டு வாசலில் 3 மணிநேரம் காத்துக் கிடந்தும் அவரை பார்க்க முடியவில்லை. ஏன் இதுவரை அவரை பார்க்க முடியவில்லை. இந்த காத்திருப்பு சிறந்த படத்திற்காக என்று நினைக்கிறேன்.


நேரம்

நேரம்

அஜீத்துடன் படம் பண்ணும் நேரம் வரும்வரை காத்திருப்பேன். சிறந்த நடிகரான அவரை இயக்க நான் என்னை மேலும் தயார் செய்து கொள்ள வேண்டும்.
ஆப்பு

ஆப்பு

ஒன்ஸ் அபான் எ டைம் இன் அமெரிக்கா படத்தை பார்த்த பிறகு நான் எழுதிய கதை அவ்வளவு நன்றாக இல்லை. அதனால் அந்த ஐடியாவை கைவிட்டேன். அந்த படத்திற்கு நான் வைத்த தலைப்பு 'ஆப்பு- 100 சதவீதம் கேரன்டி' என்று அல்போன்ஸ் அஜீத்துக்காக எழுதிய கதை பற்றி தெரிவித்துள்ளார்.
English summary
Premam fame director Alphonse Puthren said that he wrote a script for Ajith titled " Aappu" - 100 percent return guarantee."

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil