Don't Miss!
- Lifestyle
திருமணத்திற்கு முன் நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களாக சாணக்கியர் கூறுவது என்ன தெரியுமா?
- News
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை? அண்ணாமலை சூசசகம்
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Technology
Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
அஜித்துக்காக 8 வருசமா வெயிட் பண்ணி டையர்ட் ஆகிடுச்சு... ரசிகரிடம் புலம்பிய பிரபல இயக்குநர்
திருவனந்தபுரம்: நிவின் பாலி நடித்த நேரம், பிரேமம் படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்.
கடந்தாண்டு இறுதியில் அல்போன்ஸ் இயக்கிய கோல்டு திரைப்படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், ஜனவரி 10ம் தேதி உலகநாயகன் கமல் ஹாசனை நேரில் சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
அப்போது அஜித்தின் தீவிர ரசிகரான அல்போன்ஸ் புத்திரனிடம் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வியால் மனம் நொந்துபோன அவர் ரொம்பவே விரக்தியாக புலம்பியது வைரலாகி வ்ருகிறது.
சூப்பர் ஸ்மார்ட்டாக மாறிய நடிகர் நிவின் பாலி.. எவ்ளோ எடை குறைச்சிருக்காரு தெரியுமா?

நேரம், பிரேமம் இயக்குநர்
மலையாளத்தில் வித்தியாசமான ஜானர்களில் படங்களை இயக்கும் இளம் இயக்குநர்களில் முக்கியமானவர் அல்போன்ஸ் புத்திரன். 2013ம் ஆண்டு வெளியான நேரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அல்போன்ஸ், முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். நிவின் பாலி, நஸ்ரியா நஸிம், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். அதன்பின்னர் அவர் இயக்கிய பிரேமம் திரைப்படம் 2016ல் ரிலீஸாகி வேற லெவலில் ஹிட் அடித்தது.

மறக்க முடியாத மலர் டீச்சர்
தமிழில் சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தின் அப்டேட் வெர்ஷனாக உருவானது தான் பிரேமம். நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்த பிரேமம் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு அசாத்தியமானது. இதனால் அல்போன்ஸ் படங்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இயக்கிய கோல்டு திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. பிருத்விராஜ், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கமலுடன் திடீர் சந்திப்பு
நேரம், பிரேமம் படங்கள் அளவிற்கு கோல்டு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில், கடந்த 10ம் தேதி நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்தார் அல்போன்ஸ். அப்போது கமலுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். அஜித்தின் தீவிர ரசிகரான அல்போன்ஸ் கமலை நேரில் சந்தித்தது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ரசிகர் ஒருவர் "அஜித்துடன் ஒரு படம் பண்ணுங்க தலைவா" என பதிவிட்டிருந்தார்.

8 ஆண்டுகளாக காத்திருக்கிறேன்
அதற்கு பதிலளித்துள்ள அல்போன்ஸ் புத்திரன், "அஜித் சாரை இதுவரை நேரில் மீட் பண்ண முடியவில்லை. அவருக்கு பிரேமம் படம் பிடித்திருந்ததாக நிவின் பாலி கூறியிருந்தார். அதன்பின்னர் 10 முறையாவது அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் அஜித் சாரை சந்திக்க வேண்டும் எனக் கேட்டு 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனக்கு வயது ஆவதற்குள் அஜித் சாரை சந்திக்க வேண்டும். அப்படி பார்த்துவிட்டால் அவரை வைத்து படம் பண்ணுவேன். ஒவ்வொரு முறையும் நீங்கள் இந்த கேள்வி கேக்கும் போது எனக்கு கோபம் வரும். அஜித் சாரை சந்திக்க முயற்சி செய்து முயற்சி செய்து டயர்டு ஆகிவிட்டேன். நீங்களும் அஜித் ரசிகர் தான் என்பதை உணர்ந்து கொண்டேன்" என புலம்பி தீர்த்துள்ளார் அல்போன்ஸ்.