»   »  நெஞ்சில் சுமந்த 'அந்த' ஆசை நிறைவேறாமலேயே இறந்து போன அல்வா வாசு

நெஞ்சில் சுமந்த 'அந்த' ஆசை நிறைவேறாமலேயே இறந்து போன அல்வா வாசு

Posted By:
Subscribe to Oneindia Tamil
வறுமையில் வாடி இறந்து போன அல்வா வாசு-வீடியோ

சென்னை: நடிகர் அல்வா வாசுவின் ஆசை நிராசையாகிவிட்டது.

900 படங்களுக்கு மேல் நடித்தவர் வாசு. அமைதிப் படை படத்தில் சத்யராஜுக்கு அல்வா வாங்கிக் கொடுத்த காட்சியில் நடித்த பிறகு அல்வா வாசுவாகிவிட்டார்.

Alwa Vasu's unfulfilled wish

வடிவேலு காமெடி குழுவில் முக்கிய ஆளாக இருந்தார். வடிவேலு காமெடியில் அசத்தினாலும் அல்வா வாசு தனது வெகுளித்தனமான நடிப்பால் ரசிகர்களை தன்னையும் கவனிக்க வைத்தார்.

மதுரையை சேர்ந்த வாசு இசையமைப்பாளர் ஆகும் ஆசையுடன் தான் சென்னை வந்தார். ஆனால் இசை பக்கம் போக முடியாமல் உதவி இயக்குனரான அவர் நகைச்சுவை நடிகரானார்.

மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தார். மணிவண்ணனுக்கு மிகவும் பிடித்த நபராக இருந்தவர் அல்வா வாசு. என்றாவது ஒரு நாள் நான் இயக்குனர் ஆவேன் என்ற ஆசையை சுமந்து கொண்டு வாழ்க்கையே ஓட்டியவர்.

கடைசி வரை இயக்குனர் ஆகும் ஆசை நிறைவேறாமலேயே விண்ணுலகம் சென்றுவிட்டார்.

English summary
Actor Alwa Vasu's dream to become a director has been unfulfilled. Alwa Vasu passed away at his residence in Madurai on thursday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil