»   »  பிந்து மாதவியுடன் காதலா?: வருண் மணியன் விளக்கம்

பிந்து மாதவியுடன் காதலா?: வருண் மணியன் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை பிந்து மாதவியுடன் காதல் என்று பரவிய செய்தி குறித்து பட தயாரிப்பாளரும், தொழில் அதிபருமான வருண் மணியன் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை த்ரிஷாவுக்கும் பட தயாரிப்பாளரும், தொழில் அதிபருமான வருண் மணியனுக்கும் திருமணம் நிச்சயமானது. அதன் பிறகு திருமணம் நின்றுவிட்டது.

திருமணத்தை நிறுத்தியதற்கான காரணத்தையும் த்ரிஷா தெரிவித்தார்.

பிந்து மாதவி

பிந்து மாதவி

கோலிவுட்டில் ஒரு இடத்தை பிடிக்க போராடி வரும் பிந்து மாதவியும், வருண் மணியனும் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பிந்துவே ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.

காதல்

காதல்

பிந்து வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தவர்கள் அவரும், வருண் மணியனும் காதலிப்பதாக நினைத்தார்கள். இதற்கிடையே பிந்து மாதவி அந்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட்டார்.

வருண் மணியன்

வருண் மணியன்

பிந்து மாதவி குறித்து வருண் மணியனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், நான் சில நண்பர்களுடன் கடந்த மாதம் மாலத்தீவுகளுக்கு சென்றேன். பிந்து மாதவியும் வந்திருந்தார் என்றார்.

இல்லை

இல்லை

மாலத்தீவில் நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தான் அவர் வெளியிட்டார். நான் பிந்து மாதவியை காதலிக்கவும் இல்லை, அவரை திருமணம் செய்யப் போவதும் இல்லை என்று வருண் தெரிவித்துள்ளார்.

நண்பர்கள்

நண்பர்கள்

நானும், பிந்து மாதவியும் நல்ல நண்பர்கள் அவ்வளவு தான். எங்களுக்கு இடையே வேறு எதுவும் இல்லை என்கிறார் வருண். வருணின் விளக்கத்தை பார்த்த நெட்டிசன்களோ நல்ல நண்பர்கள் என்றாலே அது தான் என்று கூறி வருகிறார்கள்.

English summary
Film producer Varun Manian said that he is not dating actress Bindu Madhavi and definitely not planning to marry her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil