»   »  அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளேனா?: வைரமுத்து விளக்கம்

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளேனா?: வைரமுத்து விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா காலமானார். அவரை அடுத்து அப்பல்லோவில் இருந்த பத்தரிகையாளர் சோ உயிர் இழந்தார்.

இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

வைரமுத்து

வைரமுத்து

வைரமுத்துவும் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளாராமே. அவருக்கு என்ன ஆனது என தெரியவில்லை என்று ஆளாளுக்கு பேசத் துவங்கினர்.

அப்பல்லோ

அப்பல்லோ

தன்னை பற்றிய செய்தி ஒன்று காட்டுத் தீயாக பரவி வருவது குறித்து அறிந்த வைரமுத்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அவர்
ட்விட்டரில் கூறியிருப்பதாவது, வணக்கம். ஒவ்வோர் ஆண்டும் நான் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனை செய்து கொண்டேன்.

நலம்

நான் முழு உடல் நலத்தோடு
இருப்பதாக அப்போலோ மருத்துவக் குறிப்பு தெரிவிக்கிறது.
பரபரப்பான செய்திகள் பரப்ப வேண்டாம்.

என் மீது தான் எவ்வளவு அன்பு. அக்கறைகொண்டு விசாரித்த அனைவருக்கும் நன்றி.

ஊடகங்களுக்கு என் வணக்கம் என வைரமுத்து ட்வீட்டியுள்ளார்.

மதன் கார்க்கி

என் தந்தை பற்றி பரவும் செய்தியில் உண்மை இல்லை. நாங்கள் வருடாந்திர முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளோம் என மதன் கார்க்கி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Lyricist Vairamuthu has given explanation in twitter after a news of him getting admitted in Apollo hospitals spread.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil