»   »  பின்னணிப் பாடகியாக அவதாரமெடுத்த தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் மருமகள்!

பின்னணிப் பாடகியாக அவதாரமெடுத்த தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் மருமகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம் இதுவரை பல முன்னணி ஹீரோக்களின் படங்களைத் தயாரித்திருக்கிறார். இவரது மருமகள் ஐஸ்வர்யா தற்போது பின்னணிப் பாடகியாக அறிமுகமாகி இருக்கிறார்.

இயக்குநர் ஜோதி கிருஷ்ணாவின் மனைவியான இவர், அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால், 'வேதாளம்' மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கருப்பன்'ஆகிய படங்களின் தயாரிப்பில் பங்கு பெற்றவர்.

AM Ratnam's daughter-in-law Aishwarya has been introduced as a playback singer

தயாரிப்பாளராக இருந்த ஐஸ்வர்யா சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் தெலுங்கில் உருவாகி வரும் 'ஆக்சிஜன்' என்ற படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாகி இருக்கிறார். இப்போது 'கூத்தன்' என்ற படத்திற்காகவும் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார்.

AM Ratnam's daughter-in-law Aishwarya has been introduced as a playback singer

ஏ.எல்.வெங்கி இயக்கத்தில் அறிமுக நடிகர் ராஜ்குமார் நடிப்பில் உருவாகி வரும் 'கூத்தன்' படத்தில் பாலாஜி இசையில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம்பெறுகின்றன. இவற்றில் ஒரு பாடலை நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளர். ஐஸ்வர்யாவுக்கு நல்ல குரல் வளம் இருப்பதை அறிந்து அவரை ஒரு பாடலை பாட அழைத்திருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா அந்தப் பாடலை பாடிய விதம், குரலின் இனிமை ஆகியவை தயாரிப்பாளருக்கும், இசையமைப்பாளருக்கும் மிகவும் பிடித்துப் போனதால் மற்றொரு பாடலையும் அவரையே பாடச் சொல்லியுள்ளனர்.

English summary
AM Ratnam's daughter-in-law Aishwarya has been introduced as a playback singer. She is the wife of director JothiKrishna and participated in the production of several films. He is a playback singer with Yuvan shankar raja music in 'Oxygen' Telugu film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil