»   »  விஜய்யின் அப்பாவுக்காக அமலா பாலை ஒதுக்கும் தயாரிப்பாளர்கள்?

விஜய்யின் அப்பாவுக்காக அமலா பாலை ஒதுக்கும் தயாரிப்பாளர்கள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனுடனான நட்பை இழக்க விரும்பாத சில சினிமா பட தயாரிப்பாளர்கள் அமலா பாலை தங்களின் படங்களில் நடிக்க வைப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளார்களாம்.

நடிகை அமலா பாலும் அவரது காதல் கணவருமான இயக்குனர் ஏ.எல். விஜய்யும் திருமணமான இரண்டே ஆண்டுகளில் பிரிந்துவிட்டனர். இருவரும் முறைப்படி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

அமலா பால் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார்.

அழகப்பன்

அழகப்பன்

விஜய்யின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான ஏ.எல். அழகப்பனின் நட்பை இழக்க விரும்பாத சில தயாரிப்பாளர்கள் அமலா பாலை தங்களின் படங்களில் நடிக்க வைப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளார்களாம்.

அமலா

அமலா

அந்த தயாரிப்பாளர்கள் அமலாவை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய நினைத்த வேளையில் விவாகரத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அமலாவை ஒப்பந்தம் செய்யும் முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளார்களாம்.

கருத்து

கருத்து

இந்த அறிவிக்கப்படாத தடை குறித்து அமலா பால் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தனிப்பட்ட விஷயங்கள் பற்றி செய்தியாளர்களிடம் பேசுவது இல்லை என்ற முடிவில் உள்ளார் அமலா.

விஜய்

விஜய்

அமலா பால் தொடர்ந்து நடிப்பதால் தங்களுக்குள் பிரச்சனை இல்லை என்றும், நம்பிக்கை, நேர்மை மீறப்பட்டதால் தான் பிரிவு என்றும் ஏ.எல். விஜய் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
If the rumours are to be true, Amala Paul is facing an 'unofficial ban' after she decided to go for a divorce.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil