சுழல் வெப்சீரிஸுக்காக சுழன்று ஆடி புரமோஷன் செய்த ஷிவானி நாராயணன்.. அமலா பாலும் சும்மா விடல!

சென்னை: விக்ரம் வேதா இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி திரைக்கதை எழுதி இயக்குநர் பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கி உள்ள சுழல் வெப்சீரிஸ் வரும் ஜூன் 17ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த வெப்சீரிஸின் டிரைலர் மற்றும் புரமோ வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.

இந்நிலையில், இதன் புரமோஷனுக்காக நடிகைகள் ஷிவானி நாராயணன், அமலா பால் உள்ளிட்டோர் செய்துள்ள புரமோஷன் வீடியோக்கள் டிரெண்டாகி வருகின்றன.

சுழல் வெப்சீரிஸ்

சுழல் வெப்சீரிஸ்

அமேசான் பிரைம் ஓடிடியில் வரும் ஜூன் 17ம் தேதி சுழல் வெப்சீரிஸ் வெளியாகிறது. ஓடிடி ரசிகர்களுக்காக ஒரு சீட் எட்ஜ் த்ரில்லராக இந்த சுழல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி இந்த வெப்சீரிஸுக்கான கதையை எழுதி உள்ளனர்.

நடிப்பு அரக்கர்கள்

நடிப்பு அரக்கர்கள்

விக்ரம் வேதா படத்திலேயே விஜய்சேதுபதியின் தம்பியாக நடித்து அசத்திய நடிகர் கதிர், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திமிரு படத்தில் வில்லியாக மிரட்டிய ஸ்ரேயா ரெட்டி என நடிப்பு அரக்கர்கள் இந்த வெப்சீரிஸில் நடித்துள்ளனர்.

சுழன்று ஆடும் ஷிவானி

சுழல் வெப்சீரிஸை ரசிகர்கள் மத்தியில் புரமோட் செய்யும் விதமாக படக்குழு புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது. சோஷியல் மீடியாவில் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை ஷிவானி நாராயணனை வைத்து தற்போது புதிய புரமோஷன் செய்துள்ளனர். சுழல் படத்தின் டைட்டில் டிராக்கை கேட்ட உடனே இப்படித்தான் ஆடத் தோன்றுகிறது என சுழன்று ஆடி உள்ள வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

விக்ரம் படத்தில் அறிமுகம்

விக்ரம் படத்தில் அறிமுகம்

சின்னத்திரை நடிகையாக வலம் வந்த ஷிவானி நாராயணன் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு பிரபலமானார். ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் ஷிவானி சினிமாவில் கமல்ஹாசனின் விக்ரம் படம் மூலமாக நடிகையாக அறிமுகமாகி உள்ளார். வில்லனாக நடித்துள்ள விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி விக்ரம் படத்தில் நடித்துள்ளார். துப்பாக்கி சுட சொல்லித் தரும் காட்சிகளில் எல்லாம் கலக்கி உள்ளார். அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படத்திலும் போலீஸ் அதிகாரியாக ஷிவானி நடித்துள்ளார்.

முறைத்து பார்க்கும் அமலா பால்

முறைத்து பார்க்கும் அமலா பால்

நடிகை அமலா பாலும் தனது இன்ஸ்டாகிராமில் முறைத்து பார்த்து ஏகப்பட்ட ரியாக்‌ஷன்களை கொடுத்து வீடியோ ஒன்றை போட்டு சுழல் வெப்சீரிஸை புரமோட் செய்துள்ளார். அமேசான் பிரைமில் கிட்டத்தட்ட 30 மொழிகளில் 240 நாடுகளில் இந்த வெப்சீரிஸ் மிகவும் பிரம்மாண்டமான முறையில் இந்த வெப்சீரிஸ் வெளியாக போகிறது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X