»   »  நடிகை அமலாபால் கைது... சில மணி நேரத்தில் ஜாமீனில் விடுதலை!

நடிகை அமலாபால் கைது... சில மணி நேரத்தில் ஜாமீனில் விடுதலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அமலாபால் மீதான விசாரணையைத் தொடர் நீதிமன்றத்தில் இனி..!!

கொச்சின்: நடிகை அமலாபால், புதுச்சேரியில் சொகுசு கார் பதிவு செய்ததன் மூலம் 20 லட்சம் ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சொகுசு கார் பதிவு செய்த வழக்கில் கேரள மாநிலம் கொச்சினில் நடிகை நேற்று அமலாபால் கைது செய்யப்பட்டார்.

போலீசார் அவரை கைது செய்து ஒரு சில மணி நேரத்தில் சொந்த ஜாமீனில் விடுதலை செய்தனர்.

அமலாபால்

அமலாபால்

'மைனா', 'வேலையில்லா பட்டதாரி' உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அமலாபால். இவர் மற்றும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, ஃபகத் பாசில் ஆகியோர், புதுச்சேரி முகவரியில் போலி ஆவணங்கள் மூலம் சொகுசு கார் வாங்கிய வழக்கில் கேரள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.

வரி ஏய்ப்பு புகார்

வரி ஏய்ப்பு புகார்

நடிகை அமலா பால் ஒரு கோடிக்கும் கூடுதலான மதிப்புள்ள சொகுசு கார் வாங்கி, அதனை போலி முகவரி கொடுத்து புதுச்சேரியில் பதிவு செய்ததன் மூலம் 20 லட்சம் ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அவர் மீது கேரள மாநில குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இமேஜ் பாதிக்கும்

இமேஜ் பாதிக்கும்

இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பது கட்டாயம். இதனால் இதுபோன்ற வழக்கை சந்தித்த பகத் பாசிலும், சுரேஷ் கோபியும் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். அமலாபால் போலீஸில் கைதானால் அது தன் இமேஜை பாதிக்கும் என்பதால் கைதாகாமல் வழக்கை சந்திக்க பலவாறு முயற்சித்தார்.

அமலாபால் கைது

அமலாபால் கைது

இந்த நிலையில் கொச்சி குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகுமாறு அமலா பாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. பல முறை சம்மன் அனுப்பிய பிறகு அமலா பால் கடந்த வாரம் போலீஸ் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். நேற்று மாலை அமலாபால் கொச்சினில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில், எஸ்.பி. சந்தோஷ்குமார் முன்னிலையில் ஆஜரானார்.

அமலாபால் ஜாமீனில் விடுவிப்பு

அமலாபால் ஜாமீனில் விடுவிப்பு

விசாரணைக்கு ஆஜராகி சரணடைந்த அமலா பாலை கைது செய்த போலீசார், கேரள உயர்நீதிமன்றம் அளித்த முன்ஜாமீனை அடிப்படையாகக் கொண்டு ஒரு சில மணி நேரத்தில் சொந்த ஜாமீனில் அவரை விடுவித்தனர். அமலாபால் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெறுகிறது.

English summary
Kerala Crime branch Police had filed a case against actress Amala Paul for registering a luxury car by giving a fake address. In this case, Amala Paul was summoned to appear for police enquiry . Yesterday, police arrested Amala Paul, who appeared for police enquiry. After, Crime branch police released her on bail.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil