Don't Miss!
- Lifestyle
தம்பதிகளே! உங்க உறவில் நம்பிக்கையையும் நெருக்கத்தையும் உருவாக்க நீங்க என்ன பண்ணணும் தெரியுமா?
- Automobiles
டாடாவிற்கு சரியான போட்டி தயார்... இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரை போட்டி போட்டு புக் பண்றாங்க!!
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- News
திண்டுக்கல் சீனிவாசனை மட்டும் தனியாக சந்தித்த எடப்பாடி.. 30 நிமிடங்கள்.. என்ன நடந்தது? ரகசியமாம்!
- Finance
சீனாவை ஆட்டி படைத்த சவால்கள்.. 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு.. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கவலை!
- Sports
சூர்யகுமாரின் பலவீனம் இதுதான்.. அதை சரி செய்தே தீர வேண்டும்.. தினேஷ் கார்த்திக் அட்வைஸ்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
முதல் முறையா இதை இப்போதான் குடிக்கிறேன்.. அமலா பால் போட்ட செம கூலான வீடியோ.. என்னன்னு பாருங்க!
சென்னை: நடிகை அமலா பால் சமீப காலமாக தமிழ் சினிமாவில் அதிகம் தலை காட்ட வில்லை என்றாலும் சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்களுடன் எப்போதுமே தொடர்பில் உள்ளார்.
அடிக்கடி கண்ணை பறிக்கும் கவர்ச்சிகரமான போட்டோஷூட்களை நடத்தி லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு வைரலாக்கி வரும் அமலா பால் வெளியிட்டுள்ள புதிய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
முதல் முறையாக இதை இப்போ தான் குடிக்கிறேன் என அவர் போட்டுள்ள அந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் இருக்கும் நான்கு பேர்...இந்த வாரமும் ட்விஸ்ட் இருக்குமா ?

விவாகரத்துக்குப் பின்
இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை அமலா பால் கருத்து மோதல் காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார். விவாகரத்துக்கு பின்னர் தமிழ் படங்களில் அமலா பாலுக்கு கணிசமாக வாய்ப்புகள் குறைந்தன. ஆடை படத்திற்கு பிறகு அமலா பால் கோலிவுட்டில் பெரிய படங்களை கைப்பற்ற முடியாமல் தவித்து வருகிறார்.

நிம்மதி தேடி
நடிகை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என அவருடைய நண்பர் வெளியிட்ட புகைப்படங்களால் கிளம்பிய சர்ச்சை காரணமாக கடுப்பான அமலா பால் நிம்மதி தேடி ஈஷா யோகா மையம், ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மிக சுற்றுலா சென்று வந்தார்.

கடற்கரை கவர்ச்சி
தத்துவ போஸ்ட்டுகளுக்கு நடுவே கடற்கரையில் கவர்ச்சியாக பிகினி உடைகளை அணிந்து கொண்டு இருக்கும் அட்டகாசமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து இணைய வாசிகளை தக்க வைத்து வருகிறார். பிரபல நடிகையான அமலா பால் இன்ஸ்டாகிராமில் இதுவரை 3.9 மில்லியன் ரசிகர்கள் தான் உள்ளனர். அவருக்கு பின்னால் வந்த பல இளம் நாயகிகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எல்லாம் பல மில்லியன் ரசிகர்கள் இணைந்துள்ளனர்.
விளம்பரத்தில் பிசி
தமிழில் அதிக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், தெலுங்கு மற்றும் இந்தியில் வெப் சீரிஸ் பக்கம் கவனம் செலுத்தி வரும் அமலா பால் விளம்பரங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் மான்ஸ்டர் எனர்ஜி ட்ரிங்க் விளம்பரத்தில் நடித்திருந்த அமலா பால் இன்ஸ்டாகிராமில் அந்த விளம்பர வீடியோவை வெளியிட்டு வைரலாக்கினார்.
இதுதான் ஃபர்ஸ்ட் டைம்
இந்நிலையில், தற்போது ஜிகர்தண்டா குளிர்பானத்தை குடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நடிகை அமலா பால் இப்போ தான் முதல் முறையாக இதை குடிக்கிறேன் என கேப்ஷன் போட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். மேலும், "Life is short, try it all - the good, the bad, the ugly! " என சில பல தத்துவங்களையும் ஷேர் செய்துள்ளார் அமலா பால்.