»   »  குடும்பநல நீதிமன்றத்தில் அமலா பால்... விவாகரத்து மனுவை சமர்ப்பித்தார்!

குடும்பநல நீதிமன்றத்தில் அமலா பால்... விவாகரத்து மனுவை சமர்ப்பித்தார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கணவர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி இன்று முறைப்படி மனு தாக்கல் செய்தார் நடிகை அமலா பால்.

முன்னணி நடிகையான அமலா பாலுக்கும் இயக்குநர் விஜய்க்கும் இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சில மாதங்களாகப் பிரிந்து வாழ்கின்றனர்.

Amala Paul files divorce papers today

தனக்கும் அமலா பாலுக்குமான தாம்பத்தியத்தில் நேர்மையும் நம்பிக்கையும் இல்லாததே இந்த பிரிவுக்குக் காரணம் என விஜய் அறிவித்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து விவாகரத்துக்கான நடவடிக்கைகளை இருவரும் மேற்கொண்டனர்.

இன்று முறைப்படி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் அமலா பால் விவாகரத்து மனுவை தாக்கல் செய்தார்.

தனது வக்கீல் சாய் ஜோஸ் கிடங்கூர் மூலம் அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். விஜய் - அமலா இருவரும் பரஸ்பர விருப்பத்தின் பேரில் விவாகரத்து மனு தாக்கல் செய்கின்றனர்.

English summary
Finally actress Amala Paul has filed her divorce papers at Chennai family court.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil