டீசர்லயே அமலாபால் தெறிக்க விட்டாங்க.. இன்னைக்கு ரிலீசாகுற டிரெய்லர்ல என்னென்ன பண்ணப் போறாங்களோ!
ஆடை படத்தின் டிரெய்லரை பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வெளியிடுகிறார்.
Recommended Video
சென்னை: அமலா பால் நடித்துள்ள ஆடை படத்தின் டிரெய்லர் இன்று வெளியாக இருக்கிறது. இதனை பிரபல பாலிவுட் இயக்குநர் வெளியிட இருக்கிறார்.
'மேயாத மான்' படத்தை இயக்கிய ரத்னகுமாரின் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள படம் ஆடை. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், அமலாபால், ஆடையில்லாமல் உடலில் காயங்களுடன் டாய்லெட் பேப்பரை சுற்றிக் கொண்டு நின்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. அதில் அமலாபால் நிர்வாணமாக இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆடை படத்தின் டீசரால் அமலாபால், விஜய் சேதுபதி பட வாய்ப்பைக்கூட இழந்தார்.

டிரெய்லர் ரிலீஸ்:
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது. இதனை பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வெளியிடுகிறார். இவர் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அனுராக் தன்னுடைய படத்தின் டிரெய்லரை வெளியிடுவதை மிகவும் மகிழ்ச்சியாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அமலாபால்.

புதிய போஸ்டர்:
இந்த அறிவிப்புடன் அவர் ஆடை படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் மணப்பெண் போன்ற தோற்றத்தில் பட்டுச் சேலை கட்டி, ஆபரணங்கள் அணிந்து, தலையில் நிறைய பூ வைத்துக் காணப்படுகிறார். ஆனால் இவற்றிற்கு முரணாக அப்போஸ்டரில் கையில் விளக்குமாறு வைத்துள்ளார்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு:
ஏற்கனவே ஆடை படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், அமலாபால் வெளியிட்டுள்ள இந்த போஸ்டரால் அது இன்னும் அதிகரித்துள்ளது. இந்த போஸ்டரில் அமலாபால் தீபிகா படுகோனே போல் காட்சி அளிப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர்.

ஏ சான்றிதழ்:
ஆடை படத்தின் டீசர் செய்த சாதனையைப் போல, டிரெய்லரும் நிச்சயம் சர்ச்சைக் காட்சிகளும் வெளி வரும், சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு சென்சாரில் 'ஏ' சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











