»   »  தவிர்த்து வரும் சமந்தா.. "வட சென்னை"க்கு இடம் பெயரும் அமலா பால்!

தவிர்த்து வரும் சமந்தா.. "வட சென்னை"க்கு இடம் பெயரும் அமலா பால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'வட சென்னை' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கப் போவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

3 பாகங்களாக உருவாகும் 'வட சென்னை' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இதில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தாவும் முக்கிய வேடத்தில் ஆண்ட்ரியாவும் நடிக்கப் போவதாகக் கூறப்பட்டது.

Amala Paul Team up with Dhanush

சமந்தாவிற்கும் தெலுங்கின் இளம் நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யாவிற்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இதனால் புதிய படங்களில் நடிப்பதை சமந்தா தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில் சமந்தாவின் திருமண விவகாரத்தால், தற்போது நாயகியாக அமலாபாலை ஒப்பந்தம் செய்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே தனுஷ் ஜோடியாக 'வேலையில்லாப் பட்டதாரி' படத்தில் அமலாபால் நடித்திருந்தார். இதுதவிர தனுஷ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான 'அம்மா கணக்கு' படத்திலும் அமலாபால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கப்போவதாக வெளியாகியிருக்கும் செய்திகள், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளன.

'வேலையில்லாப் பட்டதாரி' படத்துக்குப்பின் தனுஷுக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஹிட்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources said Amala Paul Replaced Samantha in Vada Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil