»   »  திருமணமான இரண்டே ஆண்டுகளில் பிரிந்தனர் விஜய்- அமலா பால் தம்பதிகள்!

திருமணமான இரண்டே ஆண்டுகளில் பிரிந்தனர் விஜய்- அமலா பால் தம்பதிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணமான இரண்டே ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர் இயக்குநர் விஜய் - அமலா பால் தம்பதிகள்.

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

தனிக் குடித்தனம்

தனிக் குடித்தனம்

ஜூன் 12-ந் தேதி, சென்னையில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் அமலாபால், கணவருடன் சென்னையில் குடியேறினார்.

சென்னை அடையார் போட் கிளப்பில் உள்ள ஒரு பங்களாவில் இருவரும் தனிக் குடித்தனம் நடத்தினார்கள்.

தொடர்ந்து சினிமா

தொடர்ந்து சினிமா

அமலாபால் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். அதுதான் அவரது விருப்பமாகவும் இருந்தது. ஆனால் அவர் நடிப்பதை டைரக்டர் விஜய்யும், அவருடைய குடும்பத்தினரும் விரும்பவில்லை.

கணவர் விருப்பத்தை மீறி

கணவர் விருப்பத்தை மீறி

கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் விருப்பத்தை மீறி, அமலாபால் புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இது, விஜய்-அமலாபால் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது. இரண்டு பேரும் பிரிவது என்று முடிவு செய்தார்கள்.

நண்பர்கள் முன்னிலையில்

நண்பர்கள் முன்னிலையில்

அதன்படி, அமலாபால், இயக்குநர் விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தி, பிரிந்தார்கள். இப்போது விஜய் தனது பெற்றோர்களுடன் வசிக்கிறார்.

விரைவில் விவாகரத்து

விரைவில் விவாகரத்து

அமலாபால், சென்னையில் தனியாக வசிக்கிறார். இரண்டு பேரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கப் போகிறார்கள்.

English summary
After 2 years marriage life actress Amala Paul - Director Vijay have decided to part their ways due to difference of opinion.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil