»   »  தயாரிப்பாளரானார் நடிகை அமலா பால்.. ப்ரியதர்ஷன் இயக்கும் படத்தை தயாரிக்கிறார்!

தயாரிப்பாளரானார் நடிகை அமலா பால்.. ப்ரியதர்ஷன் இயக்கும் படத்தை தயாரிக்கிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர் விஜய்யை திருமணம் செய்த பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள அமலா பால், அடுத்து தயாரிப்பாளராக மாறியுள்ளார். இவர் தயாரிக்கும் முதல் படத்தை ப்ரியதர்ஷன் இயக்குகிறார்.

இயக்குநர் விஜய் தனது திங்க் பிக் ஸ்டுடியோஸ் மூலம் சைவம் படத்தைத் தயாரித்து இயக்கினார். திருமணத்துக்குப் பிறகு இந்த நிறுவனத்தின் உரிமையாளராக மனைவி அமலா பாலை நியமித்துவிட்டார் விஜய். அடுத்து 'நைட் ஷோ' திரைப்படத்தைத் தயாரித்தது இந்த நிறுவனம்.

Amala Paul Vijay turns producer with Priyadarshan's film

அடுத்து இந்த நிறுவனத்தின் படத்தை ப்ரியதர்ஷன் இயக்க, அமலா பாலும், ஏஎல் அழகப்பனும் தயாரிக்கின்றனர். இப்படத்தின் பூஜை சென்னையில் இன்று நடந்தது.

Amala Paul Vijay turns producer with Priyadarshan's film

பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு செய்கிறார். சாபு சிரில் இப்படத்தின் புரடக்ஷன் டிசைனராக பண்ணியாற்றவுள்ளார்

Amala Paul Vijay turns producer with Priyadarshan's film

இந்தப் படம் குறித்து அமலா பால் விஜய் கூறுகையில், "நான் தயாரிக்கும் முதல் படமே சர்வதேச ரசிகர்களுக்கான படமாய் தயாரகவுள்ளது. ப்ரியதர்ஷன், சந்தோஷ் சிவன், பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி என தரமான கலைஞர்கள் இருப்பது இப்படத்திற்கு பெரிய பலம். ஆகஸ்ட் மாதம் மத்தியில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம். எங்கள் திங்க் பிக் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனதிற்கு இப்படம் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத்தரும்," என்றார் நம்பிக்கையுடன்.

English summary
Actress Amala Paul Vijay has turned as producer and veteran director Priyadharshan is directing the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil