»   »  தனுஷின் வட சென்னை படத்தில் இருந்து வெளியேறிய அமலா பால்

தனுஷின் வட சென்னை படத்தில் இருந்து வெளியேறிய அமலா பால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷின் வட சென்னை படத்தில் இருந்து அமலா பால் வெளியேறியுள்ளாராம்.

தனுஷுடன் சேர்ந்து விஐபி படத்தில் நடித்த அமலா பால் தற்போது அவருடன் சேர்ந்து விஐபி 2 படத்திலும் நடித்துள்ளார். மேலும் வெற்றிமாறன் தனுஷை வைத்து பல காலமாக இயக்கி வரும் வட சென்னை படத்தின் நாயகியும் அமலா தான்.

இந்நிலையில் வட சென்னை படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

அமலா

அமலா

தனுஷ் ஜோடியாக மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை அமலா பால் உதறியுள்ளாராம். வட சென்னை படத்தில் இருந்து அமலா பால் வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டேட்ஸ்

டேட்ஸ்

அமலா பால் கை நிறைய படங்கள் வைத்துக் கொண்டு நடித்து வருகிறார். வட சென்னை படத்தின் ஷூட்டிங் இழுத்துக் கொண்டே போவதால் அமலாவுக்கு டேட்ஸ் பிரச்சனை ஏற்பட்டு விலகியுள்ளாராம்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

அமலா பாலுக்கு பதிலாக அவர் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ஏற்கனவே தனுஷின் தயாரிப்பான காக்கா முட்டை படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய ஹீரோ

பெரிய ஹீரோ

நடிப்புத் திறமை இருந்தும் பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில் தான் அவருக்கு தனுஷ் பட வாய்ப்பு கிடைக்க உள்ளது.

English summary
According to sources, Amala Paul has walked out of Dhanush starrer Vada Chennai. She has reprotedly taken this decision because of dates issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil