»   »  அழகான அமலாபால்... அம்மா கணக்கு ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..

அழகான அமலாபால்... அம்மா கணக்கு ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் அமலாபால் நடித்துள்ள 'அம்மா கணக்கு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. ஏப்ரல் 22ம் தேதி படத்தை ரிலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமலாபால் அம்மாவாக நடித்துள்ள அம்மா கணக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இசைஞானி இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.


இந்தியில் 'நில் பேட்டே சனாட்டா' என்ற படத்தை இயக்கியவர் அஸ்வினி ஐயர். அம்மா - மகள் இருவருக்கும் இடையே நடைபெறும் பாசப் போராட்டத்தை கதைக்களமாக கொண்ட படம்.


சீனாவில் நடைபெற்ற சில்க் ரோடு திரைப்பட விழாவில் இப்படத்தில் நடித்த சுவாரா பாஸ்கருக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. விமர்சகர்கள் மத்தியில் இப்படத்துக்கு பெரும் பாராட்டு கிடைத்தது.


தனுஷ் தயாரிப்பு

தனுஷ் தயாரிப்பு

'நில் பேட்டே சனாட்டா' படத்தின் தமிழ் ரீமேக்கை கைப்பற்றி தனுஷ் தயாரித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 6ம் தேதி தொடங்கியது. தமிழ் ரீமேக்கிற்கு 'அம்மா கணக்கு' என்று பெயரிடப்பட்டுள்ளது.


அமலாபால், சமுத்திரகனி

அமலாபால், சமுத்திரகனி

இந்தி படத்தை இயக்கிய அஸ்வினி ஐயர் இப்படத்தை இயக்கினார்.இப்படத்தில் அமலாபால், சமுத்திரக்கனி, ரேவதி ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக இளையராஜா பணியாற்றி வருகிறார்.


ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஜனவரி 6ம் தேதி தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 23 முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் துவங்கப்பட்டன. தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார் தனுஷ்.


சிம்பிள் அமலா

சிம்பிள் அமலா

இந்த போஸ்டரில் அமலா பால் மிடில்கிளாஸ் பெண்மணி தோற்றத்தில் எளிமையான புடவையில் வீட்டின் பால்கனியில் நின்று கொண்டு அழகான புன்னகையுடன் காட்சியளிக்கிறார்.


மகளுடன் விளையாட்டு

மகளுடன் விளையாட்டு

மற்றொரு போஸ்டரில் டீன் ஏஜ் மகளை மடியில் போட்டு விளையாடியவாறு முகம் நிறைய சிரிப்பாக காட்சியளிக்கிறார் அமலாபால். இரண்டு போஸ்டருமே வெகு இயல்பாக இருக்கிறது.


ஏப்ரல் 22ல் ரிலீஸ்

ஏப்ரல் 22ல் ரிலீஸ்

திருமணத்திற்கு அமலாபால் நடிக்கும் இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கலாம். ஏப்ரல் 22ம் தேதி வெளியாக இருக்கும் 'நில் பேட்டே சனாட்டா' படத்துடன் 'அம்மா கணக்கு' படத்தையும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ்.


English summary
Here is the first look of Wunderbar films ,an isaignani ilayaraja musical Amma kanakku first look Actor Dhanush has been involved in many things other than acting, including singing and producing. His production house is called Wunderbar Films. And one of their important releases this year is Amala Paul starrer Amma Kanakku.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil